பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் வரும் 3 0 ல் ஹிந்து அமைப்புகள் பேரணி| Hindu organizations rally in 30 to force religious conversion in Pakistan

கராச்சி:பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது, ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்வது போன்ற சம்பவங்களை கண்டித்து, வரும் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்வதாகவும், அவர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் அங்குள்ள ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், ஹிந்து சிறுமியரை கடத்தி, முஸ்லிம்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து … Read more

”சிறையில் அடைக்கப்படலாம்… கொலை செய்யப்படலாம்… பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்..” – இம்ரான் கான்..!

தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ, பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசு பொருட்களை, கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் இம்ரான் கானை கைது செய்து, சனிக்கிழமைக்குள் ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. லாகூரில் உள்ள இம்ரான் கான் இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்யவந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். போலீசார் பதிலுக்கு தண்ணீரை பீய்ச்சி … Read more

இங்கிலாந்தில், பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 5 கிலோ நகைகள் திருட்டு…!

இங்கிலாந்தில் பட்டப்பகலில், நகைக்கடைக்குள் புகுந்து, 3 கோடி ரூபாய் நகைகளை திருடிச்சென்ற 5 பேர் கும்பலுக்கு, 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம், பிர்மிங்ஹாமில், சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்றை திருடி வந்த 5 பேர் கும்பல், வாகனத்தால் மோதி நகைக்கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கடைக்குள் புகுந்தது. ஒருவன் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்ட, மற்றவர்கள் சம்மட்டியால் கண்ணாடி பேழைகளை உடைத்து நகைகளைத்திருடினர். வெறும் … Read more

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால்… புதினுக்கு என்ன நேரும் என முன்னாள் தூதர் பேட்டி

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு தனது படைகளை ரஷியா அனுப்பியதும் அதிக பாதிப்புகளை உக்ரைன் எதிர்கொள்ளும் என பலர் கணிப்பு வெளியிட்டனர். எனினும், ரஷிய வீரர்கள் பலரை வீழ்த்தி, தனது பூமியை பாதுகாப்பதில் உக்ரைன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், ரஷியாவின் வருங்காலம் பற்றி நிபுணர்கள் கணிக்க தொடங்கி விட்டனர். அதிபர் புதினின் எதிர்காலம் என்னவாகும் என்றும் யோசிக்க தொடங்கினர். உக்ரைன் மீது … Read more

3 ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்க சீன அரசு முடிவு

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் அனைத்து வகையான விசாக்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 28ம் தேதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகும் என்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா இல்லாத … Read more

வங்கிகள் மூடல் விவகாரம்: பத்திரிகையாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாத பைடன்| Asked questions on SVB collapse, President Biden leaves press meet midway

வாஷிங்டன்: வங்கிகள் மூடல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ஜோடன் பாதியில் இருந்து வெளியேறினார். அமெரிக்க வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால்,சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. மற்றொரு வங்கியும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அதிபர் பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வங்கிகள் சரிவு தொடர்பாக அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ” வங்கிகள் சரிவை சந்தித்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்… என்ன நடந்தது … Read more

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..! காரணம் என்ன ?

வாஷிங்டன், அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் … Read more

இம்ரான் கானை கைது செய்ய தீவிரம்: போலீசார்- தொண்டர்கள் மோதல்| Islamabad police, PTI supporters clash outside Imran residence

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொண்டர்களும் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 28ம் தேதி … Read more

இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். … Read more

பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

போர்ட் மோரெஸ்பை, தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடு வந்தனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை … Read more