நாளை 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்குமா என எதிர்பார்ப்பு!

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை தீபிகா படுகோன் அழைக்கப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் செல்லோ ஷோ திரைப்படமும், சிறந்த டாக்குமெண்டரி திரைப்பட பிரிவில் ஆர் தட் ப்ரீத்ஸ் திரைப்படமும் சிறந்த டாக்குமெண்டரி குறும்பட பிரிவில் திரைப்படமும் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கில் இந்தியாவுக்கு எத்தனை … Read more

இஸ்ரேலில், புதிய நீதித்துறை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. 10வது வாரமாக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்ப பிரதமர் நெதன்யாகு சட்டத்தை திருத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, 10வது வாரமாக அங்கு போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், தலைநகர் டெல் அவிவில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  Source link

ஈரான் – சவுதி மீண்டும் நட்புறவு; இஸ்லாமிய நாடுகள் வரவேற்பு | Iran-Saudi Rekindle Relations; Islamic countries are welcome

பீஜிங் : ஈரான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட்டுள்ளதை பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வரவேற்றுள்ளன. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாகஷியா பிரிவினர் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிதாகபேசப்பட்டது. இதனால், … Read more

தரம் குறைந்த தங்கம்; சீனாவை ஏமாற்றிய ஆஸ்திரேலிய ஆலை| Low grade gold; Australian plant cheats China

பெர்த் : உலகிலேயே தங்கக் கட்டிகள் அதிகளவில் தயாரிக்கும் மிகப் பெரிய ஆஸ்திரேலிய ஆலை, தரம் குறைந்த தங்கத்தை சீனாவுக்கு விற்றுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதை மூடி மறைக்கும் வேலை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கட்டுப்பாடு மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமைந்துள்ள, ௧௨௫ ஆண்டுகள் பழமையான, ‘கோல்டு கார்ப்பரேஷன்’ என்ற ஆலை, தங்கக் கட்டிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் தங்கக் கட்டிகள் தயாரிக்கும் ஆலையாக இது உள்ளது. இந்த ஆலையில் … Read more

அமெரிக்க வர்த்தக கொள்கை ஆலோசனை குழுவில் 2 இந்தியர்கள் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா ஆகிய 2 இந்திய அமெரிக்கர்கள் உட்பட 14 பேரை நியமித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். இவர்கள், பொது வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், தொழில், விவசாயம், சிறு வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இது தொடர்பான ஆலோசனைகளை வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கு இவர்கள் வழங்குவார்கள். இந்தக் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி அத்வைதி, … Read more

அமெரிக்காவில் புயல் மற்றும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு.. ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வளிமண்டல புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கெர்ன்வில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். Source link

இந்திய நிதி உதவியில் இலங்கை பாட புத்தகம்| Sri Lanka Textbook on Indian Financial Assistance

கொழும்பு, :இலங்கையில் 40 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சடிக்க, இந்தியாவின் நிதியுதவியை அந்நாடு பயன்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு அடிப்படை தேவைக்கே அந்நாட்டு மக்கள் கடும் சிரமப்பட்டனர். மருந்து, உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா உதவியாக வழங்கியது. இதுதவிர, 100 கோடி ரூபாய் கடனாக வழங்கியது. அந்த நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் செலவழித்து, 40 லட்சம் பள்ளி … Read more