இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் … Read more

அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவு…!

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 1940-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ல், இராணுவ அணிவகுப்பு நடைபெறும். பாகிஸ்தானில் தற்போது பணவீக்கம் அதிகரிப்பாலும், பாதுகாப்புத் துறைக்கான செலவை குறைக்க சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்து வருவதாலும், ராணுவ அணி வகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. Source link

நைஜீரியாவில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் சாவு

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தின் தலைநகர் இகேஜாவில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் சென்றது. இந்த பஸ் அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டது. ஆனால் அப்போது அங்கு ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. அதனை பஸ் டிரைவர் கவனிக்காமல் சென்றதால் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் தண்டவாளத்தில் இருந்து பஸ் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

கொரோனாவுக்கு 3ஆம் ஆண்டு நினைவுத்தினம்… 200 உலக தலைவர்கள் கடிதம் – என்ன சொல்கிறார்கள்?

Third Year Anniversary Of Coronavirus: கடுமையான கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டது. இதை முன்னிட்டு,  சுமார் 200 உலகத் தலைவர்கள் ‘சமத்துவமான தடுப்பூசி விநியோகம்’ (Vaccine Equity) இன்று வெளியிடப்பட்ட கடிதத்தில்,”கொரோனா கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது உலகம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.  சமத்துவமின்மை “இப்போது எடுக்கப்பட்ட முடிவுகள், எதிர்கால உலகளாவிய சுகாதார நெருக்கடிகளுக்கு உலகம் எவ்வாறு தயாராகிறது மற்றும் செயல்படுகிறது … Read more

ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க விரைவில் அனுமதி!

ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலாடையின்றி குளித்ததற்காக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் சட்டப்போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர உடல் கலாசாரம் என்று அழைக்கப்படுவதை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க ஜெர்மனியின் லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகன் ஆகிய இடங்களில் … Read more

திவாலான சிலிக்கான் வேலி வங்கி! பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறதா அமெரிக்கா!

அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால், அந்நாட்டு வங்கி துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சிலிக்கான் வேலி வங்கி (SVB) ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிலிக்கான் வேலி வங்கி திவால்    பொருளாதார நிலையில் அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் செய்தி, அமெரிக்க … Read more

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை… வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை, மீட்புப்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். வடமேற்கு பகுதிகளில் அதிகனமழை பெய்த நிலையில், ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து, Burketown பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு வசித்து வந்த 53 குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், அங்கு வசிக்கும் சுமார் 100 பேரை, உடனடியாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். Source link

“வருங்காலத்தில் டிரம்ப் அதிபராகலாம்” – ஜோ பைடன் பேச்சு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வருங்கால அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியது பேசு பொருளாகி உள்ளது. கடந்த வியாழனன்று பென்சில்வேனியா-வில் பட்ஜெட் திட்டங்கள் குறித்த உரையில், தனது முன்னோடியும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், “ஒருவேளை வருங்கால அதிபராகலாம்” எனக் ஜோ பைடன் குறிப்பிட்டார்.  Source link

Li Qiang: சீனாவின் புதிய பிரதமர்! நெருங்கிய நண்பரை பிரதமராக்கினார் ஜி ஜின்பிங்

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங்க் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவிக்கு, அதிபர் ஜின் பிங்கிற்கு நெருக்கமான லி கியாங்  நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பிரதமரை, ‘பிரீமியர்’ என்று அழைப்பார்கள். உண்மையில், நம் நாட்டில் பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் எதுவும் சீனாவின் பிரீமியர் பதவியில் இருக்கும் அந்நாட்டு பிரதமருக்கு இருக்கது. சீனாவில் ப்ரீமியர் என்ற பிரதமர், பெயர் அளவில் மட்டும் நாட்டை ஆட்சி செய்வார். சீனாவில், நாட்டின் அதிகாரம் மொத்தமும் அதிபர் ஜி ஜின்பிங் வசம்தான் … Read more

கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழிப்பு

கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழித்தது. வடகொரிய தலைநகர் பியாங்யாங்-கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அந்த தளத்தில் 110க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் மற்றும் கொரியப் போரின்போது அமெரிக்கா தயாரித்ததாக கூறப்படும் மற்ற துருப்பிடித்திருந்த வெடிப்பொருட்களையும் தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். பியாங்யாங் நகர பொது பாதுகாப்பு பணியகத்தின் நிபுணர்களால் அந்த வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.  Source link