சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக பதவியேற்பு

பெய்ஜிங்: சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின்பிங் நேற்று பதவியேற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு … Read more

பூமியை தாக்க வரும் விண்கல் நாசா ஆய்வு மையம் கணிப்பு| NASA Observatory predicts meteorite to hit Earth

வாஷிங்டன்:வரும் 2046ல் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கணித்துள்ளது. சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் சிறுகோள் அல்லது விண்கல் என அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்துக்கு வெளியே பல விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை, அவற்றை பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து விடும். அரிதாக சில பூமியை தாக்கும் … Read more

அமெரிக்க துாதர் கார்செட்டிக்கு செனட் குழு ஆதரவு| Senate Committee Endorses US President Garcetti

வாஷிங்டன்:இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி, 52, என்பவரை நியமிக்க, அமெரிக்க செனட் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான ஓட்டுப் … Read more

கோவில்கள் மீது தொடர் தாக்குதல் ஆஸி., பிரதமர் அல்பானிசிடம் நரேந்திர மோடி வருத்தம்| Narendra Modi regrets continuous attacks on temples in Aussie, Prime Minister Albanese

புதுடில்லி, ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது வருத்தம் அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசிடம், பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். இதையடுத்து, ”இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என, ஆஸி பிரதமர் உறுதி அளித்தார். ஒப்பந்தம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு, புதுடில்லியில் நேற்று முன்தினம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு எட்டு பேர் பலியான பரிதாபம்| Tragically, eight people were killed in the shooting at the church

ஹம்பர்க் :ஜெர்மனியில் தேவாலயத்தில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், எட்டு பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்துவர்களின் யெகோவா தேவாலயம் உள்ளது. இங்குள்ள பிரார்த்தனை கூடத்திற்கு நேற்று வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு … Read more

மீண்டும் சீன அதிபரானார் ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்பு| Chinese President Xi Jinping has been sworn in for a third term

பீஜிங், சீன அரசியலில் வரலாறு படைக்கும் விதமாக, அந்நாட்டின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஷீ ஜின்பிங், 69, நேற்று பதவியேற்றுக் கொண்டார். நம் அண்டை நாடான சீனாவில், ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், இந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி, சீனாவின் அதிபராக ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அந்நாட்டு பார்லி.,யான தேசிய மக்கள் … Read more

ஜெர்மனியில் தவிக்கும் 3 வயது குழந்தை மீட்கும்படி மத்திய அரசுக்கு பெற்றோர் கோரிக்கை| Parents request central government to rescue 3-year-old child in distress in Germany

மும்பை, ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் உள்ள தங்களின், 3 வயது மகளை மீட்டுத் தரும்படி மத்திய அரசுக்கு, குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த பவேஷ், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு, தன் மனைவி தாரா மற்றும் மகளுடன் இவர் வசித்து வந்தனர். கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு பவேஷ் – தாரா தம்பதி அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை … Read more

சீன அதிபராக 3வது முறையாக ஜின்பிங் தேர்வு; இந்தியாவிற்கு என்ன பாதிப்பு.?

சீன அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவி ஏற்றுள்ளது, இந்தியாவிற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சீனாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் கூடிய சின கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வாகி இருந்தார். பொதுவாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுபவரே நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்படுவார். இந்தநிலையில் சீனாவில் மூன்றாவது அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு, அவர், மத்திய ராணுவ … Read more

1,000 ஆண்டுகள் பழமையான தங்கப் புதையல் கண்டுபிடிப்பு| 1,000-year-old gold treasure discovered

ஆம்ஸ்டர்டம் :நெதர்லாந்தில் வரலாற்று ஆய்வாளர் ஒருவர், 1,000 ஆண்டுகள் பழமையான தங்கப் புதையலை கண்டறிந்துள்ளதாக, அந்நாட்டு தேசிய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின் ஹுக்வுட் பகுதியில், வரலாற்று ஆய்வாளர் லாரன்ஸ் ரூய்ஸ்டர், 27, கடந்த 2021ல் ஆய்வு மேற்கொண்டார்.’மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் ஆய்வு செய்த இவருக்கு, பழமையான கலைப் பொருட்கள் கிடைத்தன; நான்கு தங்கப் பதக்கங்கள், இரண்டு தங்கக் காதணி, 39 வெள்ளி நாணயங்கள் என ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தார். இவற்றை, இங்குள்ள … Read more