காதுகளை சுத்தம் செய்வதற்கு “ஹெட்போன்” வடிவிலான கருவியை கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்..!

காதுகளை சுத்தம் செய்வதற்கு ஹெட்போன் வடிவிலான கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. காதுகளில் இயற்கையாக உருவாகும் “ஏர்வேக்ஸ்” எனப்படும் மெழுகானது, கிருமிகள், தூசுகள் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதே மெழுகு அளவுக்கதிகமாக காதுகளில் சேரும்போது, கேட்கும் திறன் குறைவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த நேரங்களில் உருவாகும் ஒருவித உறுத்தல் இயல்பாகவே நம்மை காதுகளை சுத்தம் செய்யத் தூண்டி விடும். அதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பாக காதுகளை சுத்தம் செய்ய, ஹெட்போன் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள “ஓட்டோசெட்” … Read more

டொனால்ட் ட்ரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர்; ஜோ பைடனின் வீடியோ வைரல்.!

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வருங்கால அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறும் வீடியோ வைரலாகிவருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது, இஸ்ரேலை அங்கீகரித்தது, அமெரிக்க எல்லையில் மதில் சுவர் அமைத்தது, அகதிகளின் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்தது, வெள்ளை இனவாதத்தை மறைமுகமாக காட்டியது என பல சர்சைகளும் இவரது ஆட்சிகாலத்தில் தான் … Read more

ஜெர்மனி: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு – 7 பேர் பலி

பெர்லின், ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை,ஆலோசனை கூடம் உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு … Read more

இரு தரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றார் ரிஷி சுனக்

இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸில் உள்ள எலிசே அரண்மனைக்கு சென்ற அவரை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். இன்றைய உச்சி மாநாட்டில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான வேறுபாடுகளை களைவது, ராணுவம் மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. Source link

நைஜீரியாவில் ரெயில் மீது பஸ் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

லாகோஸ், நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரெயில் மீது பஸ் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். முன்னதாக அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பஸ் ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரெயில் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். 84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ் டிரைவர் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் … Read more

திருமணம் செய்து கொள்ளலாமா? ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர், சக பெண் எம்.பி-யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸியம் அரங்கேறியுள்ளது. விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினர் நோவா ஏர்லிச் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார். தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் இரவில் அதனை தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதை பார்த்து அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நாதன் … Read more

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு

பெய்ஜிங், சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது. மேலும் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன நாடாளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் … Read more

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதித்துப் பார்த்ததாக தென்கொரியா குற்றச்சாட்டு!

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதித்துப் பார்த்ததாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனையின் போது, ஒரு ஏவுகணையை சுட்டு வீழ்த்தினால் கூட, அது வட கொரியா மீது போர் தொடுத்ததற்கு ஒப்பாகும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் எச்சரித்திருந்தார். இந்நிலையில், மேற்கு கடற்கரையோர நகரமான நாம்போவுக்கு அருகே கடலை நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.  Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.41 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 11 லட்சத்து 75 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்தாவிற்கு பதிலாக நுசாந்த்ராவாக மாற்ற முடிவு..!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவில் உள்ள நுசாந்த்ராவுக்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக 32 பில்லியன் டாலர் செலவில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட ஜகார்த்தா 2050 க்குள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல், நிலநடுக்கம் ஏற்படுவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஜகார்த்தாவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக தலைநகரை மாற்ற இந்தோனேஷிய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் போர்னியோவின் சுற்றுச்சூழலுக்கு … Read more