காரில், 8 மணி நேரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. கவனக்குறைவாக செயல்பட்ட தந்தை கைது..!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், காரில் 8 மணி நேரம் தனியாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தை வெப்பம் தாளாமல் உயிரிழந்தது. ஷான் ரெளன்ஸ்வால் என்பவர் தனது 2 வயது குழந்தையை Day-care center-ல் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று, கவனக்குறைவால், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை இறக்கிவிடாமல் பணிக்கு சென்றுவிட்டு, மாலை வழக்கம்போல் குழந்தையை அழைத்து செல்ல Day-care center வந்துள்ளார். அவர் குழந்தையை விடவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தபோது, குழந்தையை காரிலிருந்து இறக்கிவிட மறந்துபோனது தெரியவந்துள்ளது. வெளியே … Read more

மலேசியாவில் தொடர் கனமழை- வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்

மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஜோகூர் உட்பட 6 மாகாணங்களில் தேசிய மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 ஆறுகள் நிரம்பி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த நவம்பர் மாதம் பருவமழை தொடங்கிய … Read more

நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன: ஐ.நா

ஜெனிவா: நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா … Read more

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு வெடிபொருளுடன் வந்த நபர் கைது

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு சூட்கேஸில் வெடிபொருள்களுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். புளோரிடா மாகாணம் சான்போர்டுக்கு செல்ல வந்த 40 வயதான மார்க் மப்லி என்ற நபரின் சூட்கேசில், வெடி பொருள் இருப்பதை குறிப்பதற்கான சமிஞ்ஞை வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக பரிசோதித்ததில், வெடிக்க தயார் நிலையில் வெடிப் பொருள் (live explosive device) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு படையினரை சந்திக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியும், நைசாக அவர் நழுவிச் சென்றார். இருப்பினும் வீட்டில் அவர் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.29 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,800,782 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் ரெயில் சென்ற அதே தண்டவாளத்தில் … Read more

பயங்கர ரயில் விபத்து எதிரொலி: கிரீஸில் வெடித்தது மக்கள் போராட்டம்

ஏதென்ஸ்: கிரீஸில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் மோதி 43 பேர் பலியான நிகழ்வு, அந்நாட்டு மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் , எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து கிரீஸ் மக்களிடையே கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷிய பகுதிகளில் அவ்வப்போது ‘டிரோன்’ தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் எல்லையோரம் உள்ள ரஷியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து ‘டிரோன்’ தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை இரவு ரஷியாவின் மேற்கு பெல்கொரோட் பிராந்தியத்துக்குள் 3 டிரோன்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Earthquake of Magnitude 4.1 on the Richter Scale strikes Afghanistan pic.twitter.com/GU7P9OIMFu — ANI … Read more

டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன், சீனாவை சேர்ந்த பிரபல `டிக்-டாக்’ செயலி உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது. பின்னர் ‘டிக்-டாக்’ செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் தடை விதித்தது. இதனிடையே அமெரிக்காவில் அரசின் மின்னணு சாதனங்களில் `டிக்-டாக்’ செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன்படி அரசின் மின்னணு சாதனங்களில் இருந்து … Read more