ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்..!

ஜெர்மனியில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விமான சேவை முடங்கியது. இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி, பெர்லின், பிரிமென், ஹம்பெர்க் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், தலைநகர் பெர்லினில் மட்டும் 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 45,000 பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, விமான … Read more

சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்?

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு… 1983ல் தொடங்கப்பட்ட சிலிகான் வேலி வங்கி திவாலாவதற்கு முன் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கியாகத் திகழ்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பியிருந்த இந்த வங்கி தனது பங்கில் பாதிக்கும் மேல் கடன் தொகைகளாக வழங்கியது. நிதி நிலை அறிக்கையின் படி, 2019ம் ஆண்டில் 71 பில்லியன் டாலராக இருந்த சிலிகான் … Read more

அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் மேலும் ஒரு வங்கி மூடல்: வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. இதனிடையே, வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு மத்திய வங்கியும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் உறுதி அளித்துள்ளன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி … Read more

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்ட அந்நாட்டு மதத் தலைவர்

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா ஆமினி என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு நீதித்துறை தலைவர்  விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈரான் மதத் தலைவர் கொமேனி உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். … Read more

கராச்சியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்: நைஜீரிய பயணி உயிரிழப்பு

புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கராச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவ குழு வினர் பயணியை … Read more

ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண்: விருது வென்றவர்களின் முழு விவரம்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள மிச்செல் யோ, மலேசியா வில் பிறந்த சீனப் பெண். சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறந்த நடிகர்: பிரெண்டன் ஃபிரசர் (தி வேல்). சிறந்த ஒளிப்பதிவு: ஜேம்ஸ் பிரண்ட் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்) சிறந்த பின்னணி இசை: வோல்கர் பெர்டெல்மான் (ஆல்குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்) சிறந்த தழுவல் திரைக்கதை: விமன் டாக்கிங் சிறந்த … Read more

7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றது. நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படப் பாடல் என்ற பெருமையை, இந்தப் பாடல் பெற்றது. முதுமலையில் தயாரான ‘தி … Read more

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்| Indian plane makes emergency landing in Pakistan

புதுடில்லி, புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புதுடில்லியில் இருந்து, மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பயணிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க, நம் … Read more

அழகான மலைக்கிராமத்தில் வசிக்க ரூ.50 லட்சம் தருகிறது சுவிஸ் அரசு| Swiss government offers Rs 50 lakh to live in a beautiful mountain village

பெர்ன்:சுவிட்சர்லாந்தில் அழகான குளு குளு மலைக்கிராமத்தில் சென்று குடியேற விரும்புவோருக்கு, அந்நாட்டு அரசு 50 லட்சம் ரூபாய் அளிக்கிறது. ஆனால், கூடவே சில நிபந்தனைகளும் உள்ளன. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு வந்து குவிந்தபடி இருப்பர். இந்த அழகான சுவிஸ் பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அல்பினென் கிராமம் உள்ளது. வாலெய்ஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு செல்லும் வழியில் … Read more