ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது: ஜோ பைடன் உறுதி| Russia Cant Defeat Ukraine: Joe Biden Confirms

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வார்சவ்: ”ரஷ்யாவால், ஒரு போதும் உக்ரைனை வீழ்த்த முடியாது”, என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். திடீர் பயணமாக உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு தனது பயணத்தை முடித்து கொண்டு போலந்து சென்றார். வார்சாவ் நகரில் அவர் ஆற்றிய உரை: ரஷ்யா தாக்குதல் ஒராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், உக்ரைன் வலிமையுடன் போராடுகிறது. பெருமையுடன் நிற்கிறது. முக்கியமாக சுதந்திரத்திற்காக போராடுகிறது. நாடுகளின் இறையாண்மைக்காகவும், ஆக்கிரமிப்பு … Read more

அமெரிக்காவில் ஊருக்குள் நுழையும் மலைப்பாம்புகளுக்கு ஜிபிஎஸ் பொருத்த முடிவு..!

அமெரிக்காவில் ஊருக்குள் வலம் வரும் மலைப்பாம்புகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன. 20 அடிக்கு மேல் வளரும் இவற்றின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதைத் தவிர வீடுகளில் வளர்க்கப்படும் மலைப்பாம்புகளையும் அவற்றின் உரிமையாளர்கள் காட்டுக்குள் விட்டு விடுகின்றனர். இதனால் உணவு தேடி அலையும் இந்தவகை பாம்புகள் ரக்கூன்கள் மற்றும் ஓபோஸம்கள் உள்ளிட்ட விலங்குகளைத் தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இதனால் மக்களுக்கும் பிரச்னை ஏற்படுவதால் … Read more

கத்திக்குத்தால் சல்மான் ருஷ்டிக்கு பாதிப்பு ஒரு கண் தெரியாது; ஒரு கை இயங்காது| Salman Rushdie did not know the impact of the knife; One arm does not work

நியூயார்க் : கடந்தாண்டு கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு, 1,000 ச.மீ., நிலத்தை பரிசாக வழங்குவதாக, ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘சாத்தானின் வேதங்கள்’ என்ற புத்தகத்தில் இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை … Read more

“உக்ரைன் சுதந்திரமாக உள்ளது- போரில் அதனை வீழ்த்த முடியாது” – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீது போர் தொடுத்த புதின், அமெரிக்காவின் வலிமையைப் பார்த்து வருவதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் விற்கு 5 மணிநேர போர்நிறுத்த காலத்தில் ரகசியமாகப் பயணித்து திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவைத் தெரிவித்த அவர், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிட்டு வருவதாக புதின் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார். போரில் வீழ்த்த முடியாத அளவுக்கு … Read more

கியூபாவின் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ.. பலத்த காற்றினால் நெருப்பை அணைப்பதில் சிக்கல்

கியூபாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே 150 ஹெக்டேர் வனப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகி விட்டதாகவும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக நெருப்பை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கியூப அரசு கூறியுள்ளது. தொடரும் நெருப்பின் காரணமாக தேசிய பூங்காவை ஒட்டியுள்ள இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேறி உள்ளனர். இந்தநிலையில் சுமார் 8 ஆயிரத்து 480 ஹெக்டேர் பரப்பளவு … Read more

“பொருளாதாரச் சரிவிலிருந்து இலங்கையை மீட்க IMF ஆல் மட்டுமே முடியும்” – அதிபர் ரணில் விக்ரமசிங்க

பொருளாதாரச் சரிவிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உதவி செய்ய முடியும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாடு திவாலாகும் போது சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டுமே செல்லமுடியும் என்று குறிப்பிட்டார். மேலும் சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு கிரீஸ் 13 வருடங்கள் எடுத்ததை உதாரணமாகக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்காவிட்டால், கடந்த ஆண்டு எரிபொருள் கிடைக்காத நிலை மற்றும் … Read more

பிரேசில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் சாவ்-பாலோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குளிர்கால திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாவ்-பாலோ, சாவோ செபஸ்டியாவோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். Source link

நேட் ஜியோ புகைப்பட போட்டி விருது வென்றார் இந்திய வம்சாவளி| Nate Geo Photo Contest Award Winner is of Indian Origin

நியூயார்க் அமெரிக்காவில், ‘நேஷனல் ஜியாகரபிக்’ நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த மென்பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த புகைப்படம் விருது வென்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த, ‘நேஷனல் ஜியாகரபிக்’ நிறுவனம், புவியியல், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் தொடர்பான பத்திரிகை மற்றும், ‘டிவி’ ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த பத்திரிகை சார்பில், ஆண்டுதோறும் புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது. இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன. இதில், ‘டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்’ என்ற … Read more

டுவிட்டரை திவாலாக விடாமல் காப்பாற்றியதாக எலான் பெருமிதம்| Elan is proud to have saved Twitter from bankruptcy

வாஷிங்டன் :’டுவிட்டர்’ நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்ற வேண்டியிருந்ததாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.‘டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு இடையே, கடந்த மூன்று மாதங்களாக, டுவிட்டர் நிறுவனத்தை திவாலாகாமல் காப்பது மிகுந்த கடினமான பொறுப்பாக தனக்கு இருந்ததாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டருக்கு இன்னும் நிறைய சவால்கள் உள்ளன. ஆனால் அதற்கான சீர்திருத்தங்களை கடைப்பிடித்தால் டுவிட்டர் சிதைந்து போகும். இருந்த போதும், … Read more