மக்கள்தொகையை அதிகரிக்க திட்டம் போடும் நாடு! 30 நாள் சம்பளத்துடன் திருமண விடுப்பு

பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த சீன மாகாணங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றன நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு சீனா தாராளமாக சலுகைகளை வழங்குகிறது. சீன மாகாணங்களில் சில 30 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றன. சீன மாகாணங்கள் அதன் திருமண விடுப்பு கலாச்சாரத்தை மாற்றியமைக்கின்றன, குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிப்பதற்கான வழிகளைத் தேடும் சீனா, இந்த முன்னெடுப்பு … Read more

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம்-நிலச்சரிவு.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

பிரேசிலின் சா-பாலோ பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமைடைந்துள்ளனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால், மீட்புப் படையினர் சாலை மார்க்கமாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  Source link

நாயுடன் நடைபயிற்சி சென்ற 85 வயது மூதாட்டியை தாக்கிக் கொன்ற முதலை!

அமெரிக்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியை அலிகேட்டர் வகை முதலை ஒன்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஃப்ளோரிடாவில் குளக்கரை ஒன்றின் ஓரமாக 85 வயதான அந்த மூதாட்டி தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் மறைந்திருந்த முதலை, அவரது நாயைக் கவ்விப் பிடித்துள்ளது. தனது நாயை மீட்க மூதாட்டி போராடியபோது, அவரையும் முதலை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 11 அடி நீளம் கொண்ட அந்த முதலையை பிடித்துச் சென்றனர்.  … Read more

மாஸ்கோ அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்கலாம்! மேலை நாடுகளை எச்சரித்த புடின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது மேற்கு நாடுகளுக்கு அணுசக்தி எச்சரிக்கையை வழங்கினார், இருதரப்பு அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை இடைநிறுத்திய நிலையில், புதிய மூலோபாய அமைப்புகள் போர் நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் மற்றும் மாஸ்கோ அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்று எச்சரித்தார். மேற்கத்திய நாடுகளுடன் மிகப்பெரிய மோதலைத் தூண்டிய படையெடுப்புக்கு  தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய புடின், ரஷ்யா தனது போர் நோக்கங்களை அடையும் என்றும் மேற்கு நாடுகள் … Read more

IMF-டம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டு பாகிஸ்தான் விண்ணப்பம்!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடன் கடன் வாங்கியிருக்கும் நிலையில், மீண்டும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டு விண்ணப்பித்தது. கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்த ஐ.எம்.எஃப், மோசமான நிலையை எட்டுவதை தவிர்க்க வரி வருவாயை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி, தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவில், விற்பனை வரி 17 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  Source link

அமெரிக்காவுடனான நியூ ஸ்டார்ட் டிரீட்டி நீட்டிப்பு ஒப்பந்தம் : ரஷ்ய அதிபர் தடை| New Start Treaty extension agreement with US: Russian president vetoed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: நியூ ஸ்டார்ட் டிரீட்டி ஒப்பந்தத்தை நீட்டிப்பற்காக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யா பங்கேற்க அதிபர் புடின் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு செக் குடியரசு நாட்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் டிமெட்ரி மித்வதேவ் ஆகிய இருவரும் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் பெயர் நியூ ஸ்டார்ட் டிரீட்டி. இந்த ஒப்பந்தத்தின் படி உலக சமாதானம் கருதி … Read more

ரஷ்யாவை போர்க்களத்தில் ஒருபோதும் வீழ்த்த முடியாது – அதிபர் புதின்

ரஷ்யாவை வீழ்த்த முடியாது என தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவை வீழ்த்தி விடலாம் என்ற தவறான நம்பிக்கையில், அமெரிக்காவால் வழிநடத்தப்படும் நேட்டோ படைகள் உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார். உக்ரைன் போர் ஒருவருட காலத்தை நெருங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதிபர் புதின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு மோதலை, உலகளாவிய மோதலாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகவும், மேற்கத்திய நாடுகளே உக்ரைனில் மோதல் அதிகரிப்பதற்கு முழு பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார். மோதலை அமைதியான முறையில், … Read more

மெக்சிகோவில் பேருந்து விபத்து: அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்காக சென்ற 17 பேர் பலி!

அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்காக உரிய அனுமதியின்றி மெக்சிகோ வழியாக பேருந்தில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா, கொலம்பியா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 45 பேர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அமெரிக்கா செல்வதற்காக மெக்சிகோ நாட்டின் பியூப்லா வழியாக ஆபத்தான பாதையில் பேருந்து பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பாறையில் மோதி விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. அதே இடத்தில் 15 பேர் இறந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் … Read more

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சியால் பதற்றம்

அபுஜா: ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். எனவே, நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கோபமடைந்த மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி … Read more