ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி: ஐ.நா. கடும் கண்டனம்

சியோல், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக வடகொரியா தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் … Read more

அதி பயங்கர வெப்ப மண்டல சூறாவளிக்காற்று: மொரிஷியசில் விமானங்கள் தரையிறக்கம்| Mauritius grounds flights

வாஷிங்டன்: இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்ப மண்டல சூறவாளி காற்று உருவாகி உள்ளதாகவும், இது மொரிஷியஸ் தீவு நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச விண்வெளி மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக மொரிஷியஸ் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், புயல், இன்று(2023 பிப்.,21) மொரிஷியசை தாக்கக்கூடும். சூறாவளியால் மணிக்கு 120 கி மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இந்த புயலால் மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. புயல் ஒரு பயங்கரவமான சூறாவளியாக தாக்கும். கனமழை, வெள்ளம், … Read more

துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர். அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 46 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து துருக்கி மீண்டுவராத நிலையில், நேற்றிரவு மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.   Source link

தந்தை அளித்த வரைபடத்தின் உதவியுடன் 80 ஆண்டுக்கு பிறகு போலந்தில் வெள்ளி புதையலை கண்டுபிடித்த மகன்

கேப் டவுன்: இரண்டாம் உலகப் போரின் போது, போலந்து நாட்டை கைப் பற்ற அப்போதைய சோவியத் யூனியன் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது கிழக்குப் போலந்து பகுதியில் வசித்த ஆடம் கிஸாஸ்கி தனது 4 மகன்களை போலந்தை விட்டு வெளியேறும்படி செய்தார். அப்போது குடும்ப வெள்ளிப் பொருட்கள் அனைத்தையும் வீட்டின் பாதாள அறையில் புதைத்து விட்டு தப்பினர். இந்தச் சம்பவம் கடந்த 1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்துள்ளது. போலந்தை விட்டு சென்ற 4 சகோதரர்களும் வேறு … Read more

சினிமா பாணியில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா..!

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத்தில், சினிமாவில் வருவது போன்ற புதிய நகரத்தை அந்நாட்டு அரசு கட்டமைக்க உள்ளது. புதிய முராப்பா என்ற பெயரில் கட்டப்பட உள்ள இந்த நகரம் சுமார் 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ள முராப்பா அமெரிக்காவில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டடத்தைபோல் 20 மடங்கு பெரியதாக அமைய உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் கட்டி … Read more

1 லட்சம் வீடுகள், 9 ஆயிரம் ஓட்டல் அறைகளுடன் சவுதி அரேபியாவில் மேலும் ஒரு மெகா திட்டம் –  19 சதுர கி.மீ. பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் அமைகிறது

ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் நடுப் பகுதியில் ‘தி முகாப்’ என்ற பெயரில் ஒரு மெகா கட்டிடம் உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஒரு வீடியோவை அரசு வெளி யிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கட்டிடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல 20 மடங்கு பெரிதாக இருக்கும். 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் இந்த … Read more

அமெரிக்காவில் உலோக ஆலையில் வெடி விபத்து..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் கொளுந்து விட்டு எரிந்த தீ காரணமாக அந்த ஆலையில் உள்ள உலோகப் பொருட்கள் அனைத்தும் வெப்பம் தாங்காமல் உருகின. தகவல் அறிந்து வந்து தீயணைப்பு படையினர் இயந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Source link

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வன்முறை வழக்கு.. இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்..!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்புடைய வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இம்ரான்கான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தெஹ்ரீக் -இ- இன்சாப் அமைப்புக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் … Read more

உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் திடீர் சந்திப்பு – ரூ.4,135 கோடி மதிப்பு ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி

கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பிப்.20,21, … Read more

பிரேசிலில் கன மழை 36 பேர் பரிதாப பலி | 36 people were killed in heavy rains in Brazil

சா பாவ்லோ,பிரேசிலில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 36 பேர் பலியாகினர். நிலச்சரிவில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சா பாவ்லோ மாகாணத்தில் நேற்று ஒரே நாளில், 60 செ.மீ., மழை கொட்டியது. இதனால், பல நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சா செபஸ்டியோ நகரில், மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட வீடுகள் … Read more