ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு: அதிர்ச்சி தகவல் வெளியீடு

டெஹ்ரான், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது. இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் … Read more

அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியன் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செனட் நீதிமன்ற கமிட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அருண் சுப்ரமணியனுக்கு பணி வழங்கப்படுகிறது. அவர், பொதுமக்களின் வழக்கில் ஒவ்வொரு விசயத்திலும் நேரடியாக விசாரணை மேற்கொள்வார். மத்திய நீதிமன்ற அளவிலான பணியில் அவர் ஈடுபடுவார். இந்த நீதிமன்ற அமர்வில் சேவையாற்ற … Read more

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை – ஜெலென்ஸ்கி

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை என, அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் போரில், பாக்முட் நகரில் மட்டும் தான், 10 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய படைகளும், உக்ரைன் படைகளும் தீவிரமாக சண்டையிட்டுவருகின்றன. 80 ஆயிரம் பேர் வசித்த பாக்முட் நகரில் தற்போது 5,000 க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். பாக்முட் நகரம் ரஷ்யா வசம் சென்றால், அங்கிருந்தபடி கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களுக்கு … Read more

சிங்கப்பூர்: இந்தியரான யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், சிங்கப்பூரில் திலக் ஆயெர் தெருவில் டிரஸ்ட் யோகா என்ற பெயரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜ்பால் சிங் (வயது 33) என்ற இந்தியர் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வந்து உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்ந்த அவர் மீது 8 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி அடுத்தடுத்து 5 பெண்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். இதன்படி, 2020-ம் ஆண்டு ஜூலையில் ராஜ்பால் சிங் பாலியல் … Read more

Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

Second World War And Women: உலகம் முழுவதும், மார்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு நாளாக, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் பேசப்படும் ஆறுதல் பெண்கள் (Comfort Women). உலகப் போரின் போது அவர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றிய கதை இந்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயம். பெண்களின் உரிமை என்பது உலகில் எந்த நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துக் கொண்டால் தான், மகளிர் தினம் … Read more

அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் பலி – சீனா அறிவிப்பு

சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 53 பேர் இறந்திருக்கலாம் என்று, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுரங்கத்தில் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 2 வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 53 பேரை மீட்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அறிவித்துள்ள சீனா, மீட்புப்பணிகளையும் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.   Source link

கேலி செய்த விவகாரம்: ஊழியரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

வாஷிங்டன், உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. இதை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இத்தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும்.அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் … Read more

Video: 29ஆவது மாடியில் மலைப்பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Python Video: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரின் லிபர்ட்டி ஹூமேன் சொசைட்டி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே, மலைப்பாம்பு ஒன்றை பாாம்பு மீட்பவர்கள் மீட்டுள்ளனர். அந்த பாம்பு, பைபால்ட் பால் மலைப்பாம்பு என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம், அந்த மலைப்பாம்பு மறைந்திருந்துள்ளது.  மலைபாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம் உடனடியாக பாம்பை மீட்பு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த மீட்பு பணியாளர்கள் பாம்பை … Read more

ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்..!

ஜார்ஜியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்த நிலையில், அதிலிருந்து பெண் ஒருவரை, சக போராட்டக்காரர்கள் அரணாக நின்று காப்பாற்றினர். ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜார்ஜியா இணைவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறி, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் பிலிசியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: 10 ஆண்டுகளில் 400 வீரர்கள் உள்பட 84 ஆயிரம் பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களால் பொதுமக்கள், வீரர்கள் உள்பட பலர் மரணம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், டி.டி.பி. அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் என 400 வீரர்கள் வரை மரணம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் … Read more