எகிப்தில் சிரித்த நிலையில் காணப்படும் ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிப்பு..!

எகிப்தில் சிரிக்கும் முகம் கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரா கோவிலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தச் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் பண்டைய ரோமானியப் பேரரசின் பிரதிநிதித்துவமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தச் சிலைகள் கிசா பிரமிடுகளில் உள்ள ஸ்பிங்ஸ் சிலைகளை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்தில் உணர்ச்சியற்றுக் காணப்பட்ட ஸ்பிங்ஸ் சிலைகளையே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த நிலையில், சிரித்தபடி கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் வியப்பில் ஆழ்த்தி உள்ளன. Source link

புதிய இந்தியா நோக்கி பெண்கள்; இன்று உலக மகளிர் தினம்…| Women Towards a New India; Today is International Womens Day…

தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் , ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான் நாம் வசிக்கும் நாடு கூட ‘தாய் நாடு’ என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, … Read more

உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறிய ரஷ்ய டேங்குகள்.!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய டேங்குகள் கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறும் வீடியோ வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் 155வது டேங்க் படைப்பிரிவு உக்ரைனின் வுஹ்லேடர் என்ற நகரை நோக்கிச் சென்றது. அதன் புறநகர் பகுதியில் சிறிய சாலையில் சென்ற டேங்குகள் அடுத்தடுத்து கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறின. இதற்கு அனுபவமற்ற வீரர்கள் டேங்க்குகளை இயக்குவதே காரணம் என்று கூறப்படும் நிலையில், படையின் மூத்த அதிகாரிகள் வுஹ்லேடர் நகரை நோக்கி செல்வதற்கு மறுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் … Read more

வங்காளதேசத்தில் திடீரென வெடித்துச் சிதறிய 7 மாடிக் கட்டடம்… இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் உயிரிழப்பு!

வங்காளதேச தலைநகரான டாக்காவில் ஏழு மாடிக் கட்டடம் வெடித்து சிதறியதில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளிடையே ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது போல திடீரென கட்டடம் சரிந்ததாக உள்ளூர்மக்கள் கூறுகின்றனர். இது ஏதும் சதிவேலையா என்று உறுதி செய்ய முடியவில்லை என்று கூறிய காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் … Read more

பாக்.,கைச் சேர்ந்த துணைவேந்தருடன் பிரிட்டனில் ஒரே மேடையில் ராகுல்| Rahul on the same stage in Britain with the Vice Chancellor from Pakistan

லண்டன், பிரிட்டன் சென்றுள்ள காங்., – எம்.பி., ராகுல், அங்கு துணைவேந்தராக உள்ள பாக்.,கைச் சேர்ந்த கமால் முனீருடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்., – எம்.பி., ராகுல், தலைநகர் லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், ’21ம் நுாற்றாண்டில் கேட்டலுக்கான கற்றல்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் சமீபத்தில் உரையாற்றினார். பின்னர் நடந்த கருத்தரங்கிலும் பேசினார். இந்த பல்கலை துணைவேந்தராக உள்ள கமால் … Read more

பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஸ்பெயினில் புது அறிவிப்பு| Reservation for women announced in Spain

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மேட்ரிட் :ஸ்பெயினில், நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் 40 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு நடைமுறைபடுத்த உள்ளது. உலகம் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், பெண்களுக்கான சலுகைகளை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் வெளியிட்ட அறிக்கை: பாலின இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு … Read more

டாக்காவில் 7 மாடி கட்டிட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. மேலும் தரைத்தளத்தில் வேதியியல் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4.50 மணிக்கு கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏதோ … Read more

வளர்ச்சியை தடுக்கிறது அமெரிக்கா : சீன அதிபர் ஷீ ஜின்பிங் கவலை| Chinese President Xi Jinping worries that the US is hindering growth

பீஜிங் ”சீனாவின் வளர்ச்சியை ஒடுக்க, மேற்கத்திய நாடுகளை வழிநடத்தும் அமெரிக்காவின் செயலால், நாட்டின் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத சவால்களை சந்தித்து வருகிறோம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக போர் தொடர்ந்து வரும் நிலையில், ‘ஹுவாய்’ உள்ளிட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்களை முடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி உள்ளது. அமெரிக்க அரசு அதிகாரிகள் தங்கள், ‘மொபைல் போன்’களில் சீனாவுக்கு சொந்தமான, ‘டிக் டாக்’ செயலியை வைத்துக் கொள்ள அமெரிக்கா தடை … Read more