இந்தோனேசிய நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு; பல வீடுகள் சேதம்

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 4 பேர் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து இந்தோனேசி்யாவின் தேசிய பேரிடர் குழு கூறும்போது, “இந்தோனேசியாவின் பப்பூவா கியூனியா மாகாணத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. இதன் மையம் ஜெயபுரா பகுதியில் உள்ளது. ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கத்தினால் ஓட்டல் மற்றும் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், … Read more

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பலி.. நிலநடுக்கத்தால் கடலுக்குள் இடிந்து விழுந்த உணவகம்!

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் மையம் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானதாகவும், இந்த நிலநடுக்கத்தின் போது ஜெயபுராவில் உணவகம் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  Source link

பூகம்ப மீட்பு நடவடிக்கைகள் சுணக்கம்: துருக்கி அதிபர் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி

அங்காரா: பூகம்ப மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு சிறப்பாக செயல்படவில்லை என துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவரை 21,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் 20 வருடங்களாக துருக்கியில் ஆட்சியில் இருந்து வரும் எர்டோகன் மீது … Read more

கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் பங்குகள் மதிப்பு 9 சதவீதம் சரிவு

செயற்கை நுண்ணறிவு தேடுபொறியான கூகுள் பார்டு அறிமுக நிகழ்ச்சியில் தவறான தகவல் வெளியிட்டதன் எதிரொலியால் கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்-டின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது. மைக்ரோசாப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிதாக பார்டு என்ற உரையாடலுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. பார்டு செயலி குறித்து கூகுள் நிறுவனம் ட்விட்டரில் GIF ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் … Read more

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு.. சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட சிரியா தூதரகம் கோரிக்கை

புதுடெல்லி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை … Read more

கடன் பெற ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளை ஏற்றது பாகிஸ்தான் அரசு

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.பிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் தொகையைப் பெற பல்வேறு நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அரசு பணிந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ள ஐ.எம்.எப் குழுவினருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காணொலி வாயிலாக பேச்சு நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.   Source link

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்…!

டமாஸ்கஸ், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர … Read more

துருக்கி, சிரியாவில் பூகம்ப பலி 21,000-ஐ கடந்தது; அதிகளவில் சடலங்கள் மீட்பு

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்பகப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர். தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். … Read more

ட்ரோன்களைப் பயன்படுத்த ஸ்டார்லிங்கைப் பயன்படுத்திய உக்ரைன்.. நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன்களைப் பயன்படுத்த ஸ்டார் லிங்க் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் இணைப்புகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வழங்கியது. ஆனால், ட்ரோன்களைக் கட்டுப்படுத்த, ராணுவம் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைனியர்கள் இந்தச் செயல் ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் வ்வைனி ஷாட்வெல் தெரிவித்துள்ளார். Source link

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து … Read more