பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்?

துருக்கி – சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் … Read more

சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற ஆஸ்திரேலிய அரசு முடிவு..!

சீன நிறுவனங்கள் தயாரித்த சிசிடிவி கேமராக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதால், ஆஸ்திரேலிய அரசாங்கம், பாதுகாப்புத்துறை தொடர்புடைய அலுவலகங்களில் பொருத்தப்பட்டிள்ள சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடந்தாண்டே சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவும் அம்முடிவுக்கு வந்துள்ளது. Source link

உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் – எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகள் போர் விமானங்களை அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் என ரஷ்யா எச்சரித்துள்ளது. நேற்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் என்ன ஆயுதங்களை வழங்கினாலும் ரஷ்யா ராணுவ தாக்குதலை முன்னெடுக்கும் என்றும், போர் விமானங்களை தருவது உக்ரைன் மக்களுக்கு வலியையும் துன்பத்தையும் … Read more

“இடிந்துபோன 6,400 கட்டடங்கள் ஓராண்டிற்குள் கட்டி எழுப்பப்படும்” – தையிப் எர்டோகன்

துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்துபோன ஆறாயிரத்து 400 கட்டடங்களும் ஓராண்டிற்குள் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். கடும் குளிரில் மக்கள் நடுங்கிவருவதாகவும், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க கேஸியன்டாப் நகரில் நிலநடுக்க பாதிப்புகளை அதிபர் எர்டோகன் ஆய்வு செய்தார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 63 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்… Source link

எரிவாயு கசிவால், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து.. 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 2 வாயில்கள் இடிந்து தரைமட்டமானதுடன், 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எரிவாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. Source link

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான். ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மோஸ் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், தாய், தந்தையரைத் தேடி அவன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. Source link

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல்.. விற்பனையை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்!

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாபமீட்டும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவில் பெட்ரோல் விற்பனை செய்துவருகின்றனர். பல பெட்ரோல் நிலையங்களில், இருசக்கர வாகனங்களில் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பபடுகின்றன. பெட்ரோல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும், அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் அரசு, செயற்கை தட்டுப்பாடை ஏற்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

இந்தியா மீது தடையா: அழுத்தமாக மறுக்கிறது அமெரிக்கா | “Comfortable” With India Approach On Russian Oil, No Sanctions: US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என அமெரிக்க துணை அமைச்சர் கரேன் டான்பிரெட் கூறியுள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது அமெரிக்கா பல வித பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டிடம் இருந்து சலுகை விலையில், கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் யூரேஷியாவிற்கான … Read more

7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம்..!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வால்ட் டிஸ்னியில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், இது உலகளவில் வால்ட் டிஸ்னியில் உள்ள மொத்த ஊழியர்களில் 3.6 சதவீதம் … Read more

பூகம்பம்: பலி 16 ஆயிரத்தை தாண்டியது: தம்பியை பாதுகாத்த பாசக்கார சிறுமி| “Brave Girl”: WHO Chief On Viral Video Of Syrian Girl Shielding Brother

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டமாஸ்கஸ்: சிரியாவில், பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட சிறுமி, 17 மணி நேரம் தனது தம்பியை பாதுகாத்து வைத்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த உலக சுகாதார அமைப்பு தலைவர் உள்ளிட்டோர் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர். 16 ஆயிரம் பேர் பலி துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. வீடுகளை … Read more