பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 30 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயணிகள் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 30 பேர் உயிரிழந்தனர். கில்கித்தில் இருந்து நேற்றிரவு ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் எதிரே வந்த கார் மீது மோதி இரு வாகனங்களும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தன. இதில் 30 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படுகாயம் … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி: 'சாட்-ஜி.பி.டி.'க்கு பதிலடியாக கூகுளின் 'பார்டு'

நியூயார்க், வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் ‘சாட்-ஜி.பி.டி.’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏஐ உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். தொழில்நுட்ப உலகில் சக்கரவர்த்தியாக விளங்கும் கூகுள் நிறுவனத்தை கட்டுப்படுத்தவே இவர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடி கொடுக்கும்விதமாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்கிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் அறிவித்த கூகுள் நிறுவன … Read more

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

அங்காரா, நில நடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அங்கு எரிந்து போன கன்டெய்னர்களில் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியானது. அங்கு தொடர்ந்து 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் துருக்கி கடலோரக் காவல் படை கப்பல் உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கன்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினத்தந்தி Related Tags : Earthquake Turkish … Read more

பூகம்ப பாதிப்பு | துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு 7,900 ஆக அதிகரிப்பு

அங்காரா: துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தால் அந்நாட்டிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900-ஐ கடந்துள்ளது. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் … Read more

ChatGPT-க்கு போட்டியாக வருகிறது கூகுள் Bard

மைக்ரோசாப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பார்டு என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் OpenAI எனும் நிறுவனத்தால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தது, பல்வேறு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது.  இந்நிலையில், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதியதாக பார்டு என்ற உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. LaMDA எனும் … Read more

போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா…!

வாஷிங்டன், அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு ஆயுத ஏவுதளங்களில் இந்த தளமும் ஒன்று. இந்த விமானப்படை தளம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டதாகும். இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு பலூன் … Read more

ஒவ்வொரு நிமிடத்தையும் பீதியுடன் கழிக்கிறோம் – துருக்கியில் ஆந்திர தொழிலாளர்கள் கதறல்

ஸ்ரீகாகுளம்: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 2 நாட்களாக தொடர் பூகம்பங்களால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்கள் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் அதானா நகரில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், கவிடி, சோம்பேட்டா, கஞ்சிலி பகுதியை சேர்ந்த சிலர் கட்டிட கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின் றனர். தற்போது அங்கு தொடர் பூகம்பம் ஏற்படுவதால், இவர்கள் அனைவரும் பீதியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் … Read more

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் 1.50 கோடி மக்களுக்கு பாதிப்பு..!

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வில், உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இவை வெளியேற்றும் அதிக அளவிலான நீர், பனிப்பாறை விட்டுச் சென்ற அழுத்தத்தை நிரப்புவதால், இதுவே பனிப்பாறை ஏரி என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அருகில் வசிக்கும் ஒருகோடியே … Read more

நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்த கார் – பஸ்; 30 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணம் கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவிடமிருந்து மூன்றாம் கட்டமாக எஸ்-400 ஏவுகணை இந்தியாவுக்கு விரைவில் விநியோகம் – தூதர் டெனிஸ் அலிபோவ் தகவல்

புதுடெல்லி: எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா விநியோகம் செய்தது. இந்த ஏவுகணையின் முதல்தொகுப்பு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்தது. அந்த எஸ்-400 ஏவுகணை … Read more