பூகம்பத்தின் எதிரொலியாக துருக்கியில் வீட்டு வாடகை ரூ.1.31 லட்சமாக உயர்வு

அங்காரா: சிரியாவின் அசாஸ் நகரில் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நகரில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து நேற்று 7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். சிறுமியின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். என் அம்மா எங்கே எனறு சிறுமி தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மீட்புப் படை வீரர்கள் தவித்து வருகின்றனர். சிரியாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “உள்நாட்டுப் … Read more

பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழை: 30,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால், விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. கிழக்கு பொலியாவில் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனமழை-வெள்ள பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில்,வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  Source link

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் – உயிரிழப்பு 5,200 ஆக அதிகரிப்பு

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 312 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பத்தை தொடர்ந்து … Read more

அடுத்த ஆண்டில் இந்தியா வரும் போப்| The Pope will come to India next year

ரோம்:ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படும் போப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார். போப் பிரான்சிஸ், ஆறு நாள் நல்லிணக்கப் பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ சென்றுவிட்டு, ரோம் நகருக்கு தனி விமானத்தில் திரும்பினார்; அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பன் நகரில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக இளைஞர் தின கொண்டாட்டத்திலும், செப்., ௨௩ல் பிரான்சில் உள்ள மார்செய்ல் … Read more

உலகின் சிறந்த மாணவி சென்னை சிறுமி சாதனை| Worlds best student Chennai girl feat

வாஷிங்டன், உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 பேர் பங்கேற்ற உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை மாணவி, நடாஷா பெரியநாயகம், 13, சிறப்பிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டி நடக்கும். இந்தப் போட்டியில் தான் படிக்கும் வகுப்பைவிட, உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையான கற்கும் திறன், அதை … Read more

1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது ஜூம் செயலி நிறுவனம்| App company Zoom lays off 1300 employees

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. இதற்கு பெரிதும் பயன்பட்டது வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் . இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் கராச்சியில் அடக்கம்| Former Pakistan president Musharrafs body buried in Karachi

கராச்சி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல், கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் கல்லறையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 79, ‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். தேசத் துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பர்வேஸ் முஷாரப், மருத்துவ … Read more

உளவு பலுானின் உதிரி பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு| US refuses to hand over spy plane spare parts to China

வாஷிங்டன், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலுானில் இருந்து மீட்கப்படும் மிச்சங்கள், உதிரி பாகங்கள், கருவிகளை சீனாவிடம் திருப்பி அளிக்க மாட்டோம்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வான்வெளியில், 60 ஆயிரம் அடி உயரத்தில், சீன உளவு பலுான் பறப்பதை அமெரிக்கா கடந்த வாரம் கண்டறிந்தது. உடனடியாக அந்த பலுான் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. நவீன கருவிகள் இது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தகவல் தெரிவித்ததும், பலுானை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இதை நிலப்பரப்பில் பறக்கையில் … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இரு நாடுகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.  துருக்கியின் நுர்டாகி நகருக்கு அருகே சுமார் 18 கிலோ மீட்டர் ஆழத்தில், 7 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதனை தொடர்ந்து, துருக்கியில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. இரவில் உலுக்கிய நிலநடுக்கத்தால், குடியிருப்பு கட்டடங்கள் விழுந்து, உறக்கத்திலேயே பலர் … Read more

3 சகோதரிகளை மணந்த கென்யா இளைஞர்| Kenyan youth who married 3 sisters

நைரோபி:கென்யாவில் மூன்று சகோதரிகளை, ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததுடன், அவர்களுடன் அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கேட், ஈவ், மேரி ஆகிய மூன்று சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்தவர்கள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்துடன் காணப்படும் இவர்களை, ஸ்டீவோ என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார். முதலில் கேட் என்பவரை ஸ்டீவோ சந்தித்து பேசிய நிலையில், இருவரும் பரஸ்பரம் காதலித்து … Read more