இம்ரான் கான் மரண சிறைக்கு அனுப்பபடுவார்; பாகிஸ்தான் அமைச்சர் காட்டம்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, அம்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த … Read more

துருக்கி, சிரியா பூகம்ப பலி 1,300 ஆக அதிகரிப்பு – தூக்கத்தில் அடங்கிய உயிர்கள்!

பிப்ரவரி 6 அதிகாலை 4 மணி எல்லா நாளையும் போல் புலரவில்லை துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான் காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலை குலைய வைத்துள்ளது. இதுவரை 1,500-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இடிபாடுகள் முன் காத்திருக்கும் மக்கள் அதிகாலை 4.30 மணியளவில் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது துருக்கியின் காசியான்டேப் நகரிலிருந்து 40 கீலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11 … Read more

32 கிராமி விருதுகளை வென்ற அமெரிக்க பாடகி பியான்சே.. ஹங்கேரியின் ஜார்ஜ் சோல்டி சாதனை முறியடிப்பு..!

அமெரிக்காவில் நடைபெற்ற 65வது கிராமி விருது வழங்கும் விழாவில் அமெரிக்க பாடகி பியான்சே 4 விருதுகளை வென்றதன் மூலம், அதிகமுறை இந்த விருதை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார். லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடனம், எலக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் 41 வயதான பியான்சேவின் “Renaissance,” என்ற ஆல்பம் 4 விருதுகளை தட்டிச் சென்றதால், அவரது மொத்த கிராமிய விருது எண்ணிக்கை … Read more

துருக்கி பூகம்பம் | மீட்புப் படை, நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது இந்தியா

புதுடெல்லி: துருக்கியில் பூகம்பம் காரணமாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும், மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை வழங்கவும் அந்நாட்டிற்கு மீட்புப் படை, மருத்துவக் குழு மற்றும் நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அனுப்பிவைக்க உள்ளது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியது. இதில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான … Read more

துருக்கியை மீண்டும் உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் துருக்கியை மீண்டும் உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது துருக்கியில் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் துருக்கியில் 24 மணி நேரத்திற்குள் 2-ஆவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கத்தால் துருக்கி மக்கள் கலக்கம் துருக்கியின் தென்பகுதியில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 2-ஆவது நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் சிரியாவிலும் மீண்டும் நிலநடுக்கம் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் … Read more

சிரியா பூகம்பம்: உயிரிழப்பு 237 ஆக அதிகரிப்பு; 600 பேர் காயம்

டமஸ்கஸ்: துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு சிரியாவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் துருக்கியின் நகர் காசியான்டேப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், சிரியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் வெளியாகாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், பூகம்பத்தினால் சிரியாவின் அஃப்ரின் நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரம் தெரியவந்துள்ளது. அதிகாலை 4.17 மணியளவில் … Read more

துருக்கி பூகம்பம் | பலி 640 ஆக அதிகரிப்பு; பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

அங்காரா – டமஸ்கஸ்: துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 640-ஐ கடந்துள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் … Read more

தொடரும் அட்டூழியம்..! – வங்கதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் துணை காவல் ஆணையாளர் மஹ்பூபர் ரகுமான், போலீஸ் சூப்பிரெண்டு முகமது ஜகாங்கீர் உசைன் மற்றும் இந்து, புத்த, கிறிஸ்துவ ஒய்கியா பரிஷத் தாகுர்காவன் மாவட்ட பொது செயலாளர் பிரபீர் குமார் குப்தா ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் கூறும் போது, தந்தலா யூனியன் பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் … Read more

ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸ் ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் … Read more