உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

நியூயார்க், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார். கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் … Read more

உக்ரைனுக்கு பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகள் வழங்கும் ஜெர்மனி

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த 14 பீரங்கிகளுடன், கூடுதலாக பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகளையும் வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள லெப்பர்ட்-1 ரக பீரங்களை பழுது பார்த்து சரிசெய்த பிறகு, விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் Steffen Hebestreit தெரிவித்துள்ளார். எனினும், அந்த ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 105 மி.மீ குண்டுகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது.  Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.82 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 59 லட்சத்து 69 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 9 லட்சத்து 21 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

உளவு பலூன் விவகாரம்: சீனாவின் விளக்கங்களை ஏற்க பென்டகன் மறுப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என பின்னர் தெரிய வந்தது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை … Read more

சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் கடுமையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஐ.எம்.எப். கடனை எதிர்நோக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் கடுமையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் தனது நாட்டிற்கு ஒரு பில்லியன் டாலர் கடனைத் தருவதற்கு கடினமான கெடுபிடிகளை விதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். ஒரு பில்லியன் டாலர் கடனை விடுவிப்பதற்கான தடைப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க IMF பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானில் முகாமிட்டு உள்ளது. இக்குழு மின் கட்டணத்தை … Read more

உளவு பலூன் விவகாரம்; அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்தது ஆராய்ச்சி விமானம்: சீனா விளக்கம்

பீஜிங், அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என தெரிய வந்தது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது. அதன் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளை … Read more

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தீப்பொறி பறந்ததால் அதிர்ச்சி

அபுதாபியில் இருந்து கேரளமாநிலம் கோழிக்கோடுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. எஞ்சினில் ஏற்பட்ட பழுதுகாரணமாக விமானத்தில் தீப்பொறி பறந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அபுதாபிக்கே திரும்பி வந்து விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 184 பயணிகள் பெரும் ஆபத்தில் இருந்து உயிர் தப்பினர். பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. Source link

6 வயது சிறுவனின் ஆன்லைன் அட்டகாசம்: தொடர் உணவு டெலிவரியால் தந்தை அதிர்ச்சி| 6-year-old boys online scandal: Father shocked by continuous food delivery

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் செஸ்டர்பீல்ட்-தந்தையின், ‘மொபைல் போனை’ பயன்படுத்தி, தொடர்ச்சியாக உணவு, ‘ஆர்டர்’ செய்த 6 வயது அமெரிக்க சிறுவனின் செயலால், வீடு முழுதும் உணவுப் பொருட்கள் குவிய, குடும்பத்தினர் திகைத்துப் போயினர். அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள செஸ்டர்பீல்ட் என்ற இடத்தில் வசிப்பவர், கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிரிஸ்டின் ஸ்டோன்ஹவுஸ், சமீபத்தில் இரவுக் காட்சி திரைப்படம் பார்க்க சென்றார். வீட்டில் கெய்த் மற்றும் அவரது 6 வயது மகன் மேசன் இருந்தனர். … Read more

இலங்கை 75-வது சுதந்திர தின விழாவில் மத்திய மந்திரி முரளீதரன் பங்கேற்பு

கொழும்பு, ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொள்கிறார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று இலங்கை சென்றார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை … Read more

புதுப்பொழிவு பெறுகிறது நாட்ரி டாம் தேவாலயம்:2024-ல் மீண்டும் திறக்க முடிவு| Renewed Notre Dame Cathedral: Plans to Reopen in 2024

பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 800 ஆண்டுகள் பழமையானது. பாரீஸ் நகரின் … Read more