அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மனிதர்களைப்போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ ‘அட்லஸ்’

மனிதர்களை போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தேவைப்படும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளை மனதில்வைத்து Boston Dynamics என்ற நிறுவனம் இந்த humanoid ரோபோவை வடிவமைத்துள்ளது. 3 கணினிகள் பொருத்தப்பட்டு, பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த 5 அடி உயர ரோபோவிற்கு அட்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தாவி குதித்தும், குட்டிக்கரணம் அடித்தும், தனக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றி பார்வையாளர்களை இந்த ரோபோ வியப்பில் ஆழ்த்தியது. … Read more

ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைனுக்கு பயிற்சி அளிக்கும் கம்போடியா..!

உக்ரைனின் அவசர சேவை பிரிவினருக்கு கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கன்னிவெடிகளை முற்றிலுமாக அகற்ற 7 ஆண்டுகள் வரை தேவைப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.  கம்போடியாவில், நூற்றுக்கணக்கானோர் கண்ணிவெடிகளால் கை, கால்களை இழந்துள்ளதால், பல்வேறு உலக நாடுகளுக்கு நிபுனர் குழுக்களை அனுப்பி கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியா உதவிவருகிறது. Source link

சீனர்களின் முக்கியத் திருவிழா லூனர் புத்தாண்டை முன்னிட்டு சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரம்..!

சீனர்களின் முக்கியத் திருவிழாவான லூனர் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீன வம்சாவளியைச் சேர்ந்தவரான சியோவ், மலேசியா முழுவதிலும் உள்ள சிங்க நடனக் குழுக்களுக்கான கலைப்பொருட்களை கையாலேயே வடிவமைத்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். சிங்கத் தலை தயாரிக்கும் கைவினைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மலேசியாவில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link

அழிவுப்பாதையில் பூமி..செயல்பட வேண்டிய நேரமிது..சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கை.!

2023 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் சிறப்பு விளக்கக்காட்சியில், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தைப் பாதுகாக்கக்கூடிய ‘பூமி அமைப்பு எல்லைகள்’ கட்டமைப்பை அமைப்பதற்கான ஒரு அற்புதமான ஆராய்ச்சியை சூழலியல் வல்லுநர்கள் வழங்கினர். இந்த விளக்கக்காட்சியை Potsdam Institute for Climate Impact Research (PIK) இயக்குநர் ஜோஹன் ராக்ஸ்ட்ரோம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தெற்கில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுப் பேராசிரியரான ஜோயீதா குப்தா மற்றும் IHE டெல்ஃப்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் வாட்டர் எஜுகேஷன் … Read more

மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்டிடம் 103 கோடி ரூபாய் மோசடி!

கிங்ஸ்டன்: மின்னல் வேக ஓட்டக்காரர் என அறியப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4×100 ரிலேவில் உலக சாதனை படைத்துள்ளார். 2008, 2012, 2016 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். கடந்த … Read more

அணு ஆயுதப்போர் உருவாகும் சாத்தியம்; ரஷ்யா எச்சரிக்கை.!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு … Read more

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தானின் பஞ்கூர் எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், ‘தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான்’ தீவிரவாத அமைப்பு நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு … Read more

ஈராக் – ஓமன் மோதும் கல்ஃப் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண அரங்கிற்குள் சுவர் ஏறி குதித்த ரசிகர்கள்..!

ஈராக்கில், Gulf கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ள பஸ்ரா சர்வதேச அரங்கிற்குள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சுவரேறி குதித்து நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஈராக்கில் Gulf கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. ஈராக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் உற்சாக மிகுதியிலிருந்த ரசிகர்கள், சுவரேறி குதித்து அரங்கிற்குள் செல்லமுயன்றனர். Source link

சுவரில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும் பெயிண்ட் – லண்டனில் அறிமுகம்

சுவர்களில் சிறுநீர் கழித்தால் , கழிப்பவர் மீதே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் ஒன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் லண்டனில் பரபரப்பாக காணப்படும் சோஹோ பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கு வசிக்கும் முவ்வாயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து , நீரைத் தெளித்தால் அதனை வந்த திசையிலேயே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான பெயிண்ட் ஒன்றை முதற்கட்டமாக சோஹோவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் … Read more

'வருந்தத்தக்க நிலையில் உலகம்' – ஐநா பொதுச்செயலாளர் கவலை!

உலகம் பல முனைகளிலும் தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. அதில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நமது உலகம் பல முனைகளில் புயலால் பீடிக்கப்பட்டது போல் தொடர் பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. முதலில், … Read more