உக்ரைனின் கெர்சன் நகரில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய ராணுவம்!

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் படைகளால் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரில், ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏவுகணை மற்றும் பெரிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய வீரர்கள், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஏவுகணைகள் மூலம் கெர்சன் பகுதியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bakhmut நகரில் கடுமையான சண்டை நடைபெறும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையின் முன்கள பகுதியில் ரஷ்யா தளவாடங்களையும், படைகளையும் குவித்துள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் … Read more

கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை.. ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா கொடுக்கும் ஷாக்… இந்தியாவுக்கு ஜாக்பாட்!

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார். பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இந்த தடை, ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும். ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் எரிப்பொருட்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த … Read more

ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்; நேட்டோ துணை பொதுச் செயலாளர் உறுதி.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

அமெரிக்காவிலும் டிக்டாக் தடை; உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு.!

பிரபல சீன வீடியோ செயலியான டிக்டாக் ஆனது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபை நிர்வாகப் பிரிவின்படி, அமெரிக்க அரசாங்க சாதனங்களில் இருந்து பயன்பாட்டைத் தடைசெய்யும் சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு வரும். இந்தச் செயலியானது “பல பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அதிக ஆபத்தாகக் கருதப்படுகிறது” என்று பிரதிநிதிகளின் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி (CAO) செவ்வாயன்று அனைத்து சட்டமியற்றுபவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுப்பிய செய்தியில் கூறினார். மேலும் அவை நிர்வகிக்கப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் … Read more

ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் ரத்து!

ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் ஜான் லீ அறிவித்துள்ளார். ஹாங்காங் வரும் மக்கள் இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமில்லை என்றும் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி பாஸ் காண்பிக்க வேண்டியது அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பொது இடங்களில் மக்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டாலும், மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்ற கட்டுபாடு தொடர்ந்து அமலில் உள்ளதாக ஜான் லீ குறிப்பிட்டுள்ளார்.  Source … Read more

“பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்ததால் ரொனால்டோ தடைகளுக்கு ஆளானார்” – துருக்கி அதிபர்

அங்காரா: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானார் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 2022 உலகக் கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமர வைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மொராக்கோ உடனான காலிறுதிப் போட்டியிலும் ரொனால்டோ கடைசி 30 நிமிடங்களில்தான் விளையாட அனுப்பப்பட்டார். இப்போட்டியில் … Read more

“என் தாயும் சகோதரியும் கற்க முடியாவிட்டால், எனக்கும் வேண்டாம்” – கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த ஆப்கன் பேராசிரியர்

காபூல்: “எனது தாயும், சகோதரியும் கல்வி கற்க முடியாவிட்டால், எனக்கு இந்தச் சான்றிதழ்கள் வேண்டாம்” எனக் கூறி தொலைக்காட்சி நேரலையில் ஆப்கன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த நிகழ்வு சர்வதேச கவனம் பெற்றுள்ளது. அண்மையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், “ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த … Read more

அமெரிக்காவில் மலைப்பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கித் தவித்த நாயை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினர்.!

அமெரிக்காவின் யூட்டா மலைப்பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கித் தவித்த நாயை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நாலா என்று பெயரிடப்பட்ட அந்த நாய், கிறிஸ்துமஸ் தினத்தன்று கேன்யன் நீர்வீழ்ச்சி அருகே நடைபயணம் மேற்கொண்டிருந்த போது உரிமையாளரிடம் இருந்து வழி தவறிச் சென்றது. அந்த நாய், ஒரு மலைக்குன்றின் விளிம்பில் ஆபத்தான நிலையில் நின்றிருந்ததை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். பின்னர் மீட்புக்குழுவினரை அனுப்பி சிறு காயங்களுடன் இருந்த நாயை மீட்ட போலீசார், அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.  … Read more

சீன அச்சுறுத்தல் எதிரொலி: கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு

தைபே: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு செய்துள்ளது. தைவான் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா ராணுவம் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தைவான் – சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தைவானில் காட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓர் ஆண்டாக உயர்த்த அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் முடிவு … Read more

சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. செங்சுவு நகரில், மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பனிமூட்டத்தால் சாலையில் தெரிவுநிலை குறைந்து, கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி சேதமடைந்த வீடியோக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்ததாகவும், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link