அமெரிக்காவில் வீசும் கடும் பனிப்புயலால் களை இழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்| Christmas celebration lost in America due to heavy snow storm

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பப்பல்லோ: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் இன்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை இழந்தது. பனிப்புயலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களிலும், ‘வெடிகுண்டு சூறாவளி’ எனப்படும் கடுமையான பனிப்புயல் வீசுகிறது. அங்கு, ‘மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ்’ குளிர் வாட்டி வதைக்கிறது. ஏரிகள் உறைந்து போயுள்ளன. வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும் பனியால் … Read more

இந்தியாவுடன் நல்லுறவு: சீனா திடீர் மனமாற்றம்| Good relations with India: China has a sudden change of heart

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: எல்லை பிரச்னை தீவிரமாக இருக்கும் நிலையில், நம் அண்டை நாடான சீனாவுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவுக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தீவிரமாக உள்ளது. கடந்த 2020ல் கிழக்கு லடாக்கில் அத்துமீறி சீனா நுழைய முயன்றது. இதையடுத்து, எல்லையில் தொடர்ந்து இரு நாட்டு படைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் … Read more

547 வீடுகளுக்கான முன்பதிவு தொடக்கம்: சொகுசு கப்பலில் குடியேறுகிறார் அமெரிக்க இளைஞர்

வாஷிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிஸ்டர் புன்டன், ஷானோன் லீ ஆகியோர் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் எம்.வி.நேரேட்டிவ் என்ற சொகுசு கப்பலை தயாரித்து வருகிறது. குரேஷியா நாட்டில் வடிவமைக்கப்படும் சொகுசு கப்பல் 741 அடி நீளம், 98 அடி அகலம், 18 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் 547 வீடுகள் அமைக்கப்படுகின்றன. அதோடு பள்ளி, கல்லூரி, ஆன்லைன் கல்வி வசதி, மருத்துவமனை, வங்கி, சந்தை, திரையரங்கம், நூலகம், ஓட்டல், … Read more

அதிகமாக காபி அருந்துவதால் இதயநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம், மருத்துவ ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!

தினந்தோறும் இரண்டு கப் காஃபி அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காஃபி அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு காஃபியின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? … Read more

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: விரைவில் இருமடங்கு அதிகரிக்கும் என தகவல்

செஜியாங்: சீனாவின் செஜியாங் மாகாணத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதாகவும் விரைவில் அது இருமடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. … Read more

சீனாவில் இருந்து திரும்பிய உள்ளூர் நபருக்கு கொரோனா பாதிப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைக் காண  வந்த ஆக்ராவைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் லக்னோவுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பத்து நாட்கள் சீனாவில் இருந்து அவர் இந்தியா திரும்பியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாஜ்மகாலைக் காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாதிப்புக்குள்ளான நபர் தங்கியிருந்த ஓட்டல் சந்தித்துப் பேசிய நபர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து கோவிட் … Read more

கொரோனா பாதிப்பு நிலவரம்; சீன அரசு திடீர் கட்டுப்பாடு| Corona situation; Chinese government sudden control

பீஜிங் : ‘கொரோனா பாதிப்பு குறித்த தினசரி தகவல்களை இனி வெளியிடப் போவதில்லை’ என, சீனாவின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றான பி.எப்., 7 அதிவேகமாக பரவி வருவதால், தினசரி 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 நாட்களில் மட்டும் 25 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பின் … Read more

சீனாவில் கொரோனா தாக்கத்திலும் களைகட்டிய கிறிஸ்துமஸ்.. சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் களைகட்டின. ஷாங்காய் நகர சந்தையில் முகக்கவசம் அணிந்து பண்டிகைக்கு தேவையான பரிசுப் பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள், முக்கிய கடை வீதிகள் ஜொலிக்க தொடங்கியுள்ளன. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளதால், இந்த வார இறுதியில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  Source link

டேங்கர் லாரி வெடித்து 8 பேர் உயிரிழப்பு| 8 killed in tanker truck explosion

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவில், டேங்கர் லாரி விபத்தில் சிக்கி வெடித்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள போக்ஸ்பர்க் என்ற இடத்தில், தாழ்வான பாலத்தைக் கடக்க முயன்ற பெட்ரோல் டேங்கர் லாரி, பாலத்தின் அடியில் சிக்கியது. அந்த லாரியை நகர்த்த முயன்ற போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் … Read more

என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை – தலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், அங்கு பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆடைகள் அணிவதில் விதிகளை மீறியதாக மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் பணிபுரிய தடை … Read more