உலக செய்திகள்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு – மறுவிசாரணை செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவு
தெஹ்ரான்: ஈரானில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்த ராப் பாடகர் உள்ளிட்ட இரு போராட்டக்காரர்களின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் சிலருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகளும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் … Read more
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – சீனா
இந்தியா – சீனா இடையேயான உறவுகளின், நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் இரு நாடுகளின் தொடர்பைப் பேணி வருவதாகவும், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளதாகவும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்தார். எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த 20-ம் தேதி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே, 17-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், … Read more
ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி; அதிபர் புடின் குற்றச்சாட்டு.!
உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more
குர்துகள் மீதான கொடிய தாக்குதல்: தொடர்ந்து பாரிஸில் போராட்டம்| Deadly attack on Kurds: Protests continue in Paris
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்:பாரிஸ் நகரில் குர்திஷ் இனத்தவர்கள் மீது வெள்ளிக்கிழமை நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது நாளாக வன்முறை அமைதியின்மை காணப்பட்டது.நேற்று திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து எரித்தனர், மற்றும் பொருட்களை போலீசார் மீது வீசினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குர்திஷ் கலாச்சார மையம் மற்றும் உணவகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.தன்னை இனவாதி என வர்ணித்த … Read more
சீனாவின் ஒரே நகரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா.!
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா … Read more
தினசரி கோவிட் பாதிப்பு அறிக்கை வெளியீடு: நிறுத்த சீனா முடிவு| China to stop publishing daily Covid count
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில், கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் குறித்த விவரம் வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாடு திணறி வருகிறது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. டிச.,1 முதல் 19 வரை மட்டும் 25 கோடி பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, அந்நாட்டில் கசிந்த அரசின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பானது … Read more
தினசரி கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடுவதை நிறுத்திய சீனா..!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விவரத்தை வெளியிடுவதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நிறுத்தியுள்ளது. சீன அரசு வெளியிடும், தொற்று விவரங்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குள்ளான நிலையில், காரணம் குறிப்பிடாமல், தினசரி தொற்று பாதிப்பு விவரங்கள் வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் குறிப்புக்காக தொற்று பாதிப்பு விவரங்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தினசரி மில்லியன் கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாவார்கள் … Read more
மரியுபோல் நகரின் புகழ்பெற்ற திரையரங்கை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!
ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில், போரின்போது, நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கம் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. மரியுபோலில், போர் உக்கிரமடைந்தபோது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் இந்த திரையரங்கில் தஞ்சமடைந்திருந்தனர். வான் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய படைகளுக்குத் தெரியும் விதமாக, குழந்தைகள் என பெரிய எழுத்துகளால் காட்சிப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் திரையரங்கு மீது குண்டு வீசி ரஷ்ய படைகள் போர் குற்றம் புரிந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. Source link