சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் – பகீர் தகவல்கள்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. கடுமையான ஊரடங்கு … Read more

சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் – பகீர் தகவல்கள்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. கடுமையான ஊரடங்கு … Read more

பயனாளர்களின் தகவல்களை கசிய விட்டதாக வழக்கு – ரூ.6,000 கோடி அபராதம் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புதல்

வாஷிங்டன், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை … Read more

பிரெஞ்சு சீரியல் கில்லர் விரைவாக நாடு கடத்தப்பட்டது மகிழ்ச்சி; முன்னாள் டிஐஜி கருத்து.!

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான, நெட்ஃபிக்ஸ் தொடரான “தி சர்ப்பன்” இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில், 2003 ஆம் ஆண்டு முதல் இமயமலைக் குடியரசில் சிறையில் உள்ள சோப்ராஜ் (78) உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்பளித்தது. “அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு பொருந்தாது. … Read more

ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. ஓஹியோ நெடுஞ்சாலையில் சாண்டஸ்கி நகருக்கு அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெவ்வேறு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும், பனிப்பொழிவால் சாலைகளில் தெரிவுநிலை குறைந்திருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   Source link

ஜப்பானின் கடலோர பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நீகாட்டா மாகாணத்தில் 6,300 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

ஜப்பானின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், நீகாட்டா மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிப்பொழிவால் சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிச.17ம் தேதி முதல் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

குவைத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை அனுபவிக்கிறேன்.. “என்னை காப்பாற்றுங்கள்” என பெண் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ

வேலைக்கு சென்ற இடத்தில் தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், தன்னை காப்பாற்ற கோரியும், குவைத்தில் சிக்கித்தவிக்கும் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த லீலா என்ற அந்த பெண், ஏஜெண்ட் மூலமாக கடந்த ஜனவரி 8ம் தேதி குவைத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற வீடுகளில் முறையாக சம்பள பணத்தை கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்வதாகவும், இங்கிருந்து தன்னை மீட்டு நாடு திரும்ப உதவும் படியும், லீலா கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளார். Source link

இனிமேல் தான் பல வேலைகள் உள்ளது; விடுதலைக்கு பின் பிரெஞ்சு சீரியல் கில்லர்.!

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான, நெட்ஃபிக்ஸ் தொடரான “தி சர்ப்பன்” இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில், 2003 ஆம் ஆண்டு முதல் இமயமலைக் குடியரசில் சிறையில் உள்ள சோப்ராஜ் (78) உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு … Read more

மேகன் மார்க்கல் குறித்து கீழ்த்தரமான கருத்து; மன்னிப்பு கோரியது இங்கிலாந்து ஊடகம்.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக உணர்கிறோம்; ஆப்கன் பெண்கள் குமுறல்.!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் … Read more