கடுமையான கரோனா கட்டுப்பாடுகள்: அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு – சீன அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஷாங்காய்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. … Read more

 சிவப்பு கிரக தினம்| Dinamalar

பூமியில் வசிப்பவர்கள் பல தலைமுறைகளாக நமது அடுத்த அண்டை கிரகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். நாசா விண்வெளித் திட்டம் பல தசாப்தங்களாக அதைப் பற்றி மேலும் மேலும் அறியவும் முயன்று வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் இந்த கிரகம் மேற்பரப்பில் துருப்பிடித்த இரும்பு காரணமாக சற்று சிவப்பு நிறத்தில் வானில் தோன்றுகிறது.சிவப்பு கிரக தினத்தின் வரலாறு 1964 ஆம் ஆண்டு நாசாவால் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் விண்கலமான மரைனர் 4 என்ற விண்கலம் ஏவப்பட்டதை நினைவுகூரும் வகையில் … Read more

வாடகைத் தாய் சேவையில் புதிய மாற்றம்; ரஷ்யா அதிரடி.!

கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார். குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்று எடுப்பது வாடகைத்தாய் முறை எனப்படுகின்றது. கற்பகால வாடகைத்தாய், மரபியல் வாடகைத்தாய் என வாடகைத்தாய் முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. கற்பகால வாடகைத்தாய் முறையில் கருமுட்டை தாயிடம் இருந்தும், தந்தையிடமிருந்தும் … Read more

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார் எகிப்து அதிபர்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார் மேலும், இந்தியாவும் … Read more

ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!

சியோல், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் … Read more

எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33). கேக், ரொட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் பால் வில்லியம்ஸ் (வயது 51). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளது. கணவர் தரையில் விரிப்பு, கம்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஜாஸ்மின் சிறு வயதில் பள்ளிக்கு போகும்போதே உடல் பருமனுடன் காணப்பட்டு உள்ளார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் உடல் பருமனை விட அவரது பெரிய மார்பை … Read more

Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்டறியப்பட்ட வழக்குகளில், 3709 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, 36,082 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. தொடர்ந்து நான்காவது நாளாக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்; 40 ஆயிரம் நெருங்கிய கொரோனா பாதிப்பு

பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. … Read more

அதிகமாக டிவி பார்த்த மகன்… விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை…

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக அவர்கள் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடங்களை முடித்த உடன், இரவு 8.30 மணிக்கு தூங்க செல்ல வேண்டும் என அந்த சிறுவனக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இருப்பினும், அந்த சிறுவன் தாங்கள் இல்லாத நேரங்களில், வீட்டுப்பாடங்களை முடிக்காமல், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் வீட்டிற்கு வரும்போது, வீட்டுப்பாடங்களை முடிக்காமல் சிறுவன் தூங்கிவிடுபவதும் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.  பல … Read more

நிலவில் நாசாவின் ஆதிக்கத்திற்கு சவாலாக களமிறங்க சீனா திட்டம்

பீஜிங், பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு … Read more