உலக செய்திகள்
உக்ரைன் போர் முடிவுக்கு வராததால் பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கையை, … Read more
மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar
சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை … Read more
மதரசாவில் குண்டு வெடிப்பு 10 மாணவர்கள் பரிதாப பலி
காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், ௧௦ மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், ௧௦ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. … Read more
இடுக்கி அணையை காண இன்று முதல் அனுமதி| Dinamalar
மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று(டிச.,1) முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. இருஅணைகளிலுமாக சேர்ந்து தண்ணீர் தேங்கும். செருதோணி அணையில் தான் தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள் உள்ளன. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் … Read more
இந்தியாவுடனான உறவில் தலையிடக் கூடாது சீனா எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் தகவல்| Dinamalar
வாஷிங்டன், ‘இந்தியாவுடனான தங்களுடைய உறவில் தலையிடக் கூடாது’ என, சீன ராணுவம் எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் கிழக்கு லடாக்கில், ௨௦௨௦ மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், இரு நாடுகளும் சில இடங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற்றன. அதே நேரத்தில் பல இடங்களில் இரு … Read more
இன்று உலக எய்ட்ஸ் தினம்| Dinamalar
உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக … Read more
பாலியல் வன்கொடுமையில் ரஷ்ய படையினர் உக்ரைன் அதிபரின் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு| Dinamalar
லண்டன், ”உக்ரைன் நாட்டு பெண்களை பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்வதை ரஷ்ய படையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்,” என உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா செலன்ஸ்கா, 44, குற்றஞ்சாட்டி உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கடந்த பிப்., துவங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், ரஷ்யா பல்வேறு விதமான போர் உத்திகளை கையில் எடுத்தாலும், உக்ரைனை கைப்பற்றுவதில் அது பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்நிலையில், போர்களின் போது ஏற்படும் … Read more
சீனாவின் மாஜி அதிபர் ஜியாங் ஜமீன் மரணம்| Dinamalar
பீஜிங், சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜமீன், 96, நேற்று காலமானார். ஷாங்காய் நகரில் சோப்புத் தொழிற்சாலை மேலாளராக இருந்த ஜியாங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக 1989 – 2004 வரை பதவி வகித்த ஜியாங், 1993 – 2003 வரை சீன அதிபர் பதவியையும் வகித்தார். சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில், 1989ல் நடந்த மிகப்பெரிய போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் … Read more
ஜப்பான் நாட்டில் வசிக்கும் சீன தொழிலதிபர் ஜாக் மா| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனருமான ஜாக் மா, அந்நாட்டு அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஜப்பானில் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அலிபாபா குழுமம், சீனாவின் மிகப் பெரிய வணிகங்களில் ஒன்றாகும். இதன் நிறுவனர் ஜாக் மா. உலகளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஜாக் மாவின் சொத்து மதிப்பு, தற்போது 2.52 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2020ல், … Read more