நாஜி பாணியில் பாலியல் வன்புணர்வு செய்யும் வீடுகளில் வெள்ளைக்கொடி – ரஷ்யா அட்டூழியம்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.  குறிப்பாக, உக்ரைன் பெண்களை ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் … Read more

ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு| Dinamalar

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், சீனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது. தற்போது படிப்படியாக சில நாடுகளில் … Read more

நியூசி.,யை துாசியாக ஊதித்தள்ளிய இந்தியா: 306 ரன்கள் குவிப்பு| Dinamalar

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20′, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20′ தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்’ வென்ற … Read more

நரப்பு மண்டலத்தை தாக்கும் நோவிசோக் விஷம்… எல்லை மீறுவாரா புடின்! அச்சத்தில் அமெரிக்கா!

Russia – Ukraine War: கடந்த 9 மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை உலகமே உற்றுப் பார்த்து வருகிறது. ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் உக்ரைன் நகரங்களைத் தாக்கும் இடம். அதே நேரத்தில், உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால் இத்தனைக்கும் நடுவில் வேறு ஒரு பயம் அமெரிக்காவை கலங்க வைத்துள்ளது. உக்ரைனில் பெரிய அளவிலான இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோவிச்சோக் விஷத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க … Read more

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக அசிம் முனீரை நியமித்தார் பிரதமர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வா (61), மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்புக்கு பிறகு வரும் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சா ஆகியோரை பிரதமர் ஷெபாஸ் ஷரீப் நியமனம் செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதிய ராணுவ தளபதி நியமனத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் … Read more

NASA ALERT: பூமியை நோக்கி வரும் 4 சிறுகோள்கள்! மோதினால் என்ன ஆகும்?

பூமியை நோக்கிச் வரும் ஆபத்தான நான்கு சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் வரவிருக்கும் நான்கு சிறுகோள்களால் உலகில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனெனில் ஒன்றல்ல, பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் நான்கு ஆபத்தான சிறுகோள்கள் இவை என்பதும், அவற்றில் சில ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதும் கவலை அளிக்கிறது. ஆனால் ஆறுதல் தரும் செய்தியாக, அவற்றில் சில பூமியைத் தாக்காது … Read more

மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் 10-வது பிரதமராக சீர்திருத்தவாத தலைவர் அன்வர் இப்ராகிம் (75) நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வர் இம்ராகிமின் நம்பிக்கை கூட்டணி 82 இடங்களில் வென்றது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்கள் தேவை. முன்னாள் பிரதமர்முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் மட்டுமே வென்றது. யாருக்கும் … Read more

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை யுஏஇ அறிவிப்பு

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சுற்றறிக்கையாக வெளியிட்டுஉள்ளது. Source link

ஆப்பிரிக்க தலைவர்களின் DRC போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி கவலை இல்லை: M23 கிளர்ச்சிக் குழு

ஆப்பிரிக்க தலைவர்களின் போர்நிறுத்த ஒப்பந்தம் எங்களை ஒன்றும் செய்யாது என M23 கிளர்ச்சி இராணுவ குழு கூறுகிறது. கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடி உரையாடலுக்கு அழைப்பு விடுத்த கிளர்ச்சிக் குழு, “இந்த ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை சமூக ஊடகங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டோம். அந்த கூட்டத்தில் M23 தரப்பில் இருந்து யாரும் இல்லை, அரசாங்கம் உண்மையில் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை, எனவே அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக எங்களுக்கு கவலை இல்லை என்று M23 இன் அரசியல் … Read more

ஆப்கனில் மீண்டும் கசையடி| Dinamalar

காபூல்: ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ‘கசையடி’ தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைபிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது … Read more