வீட்டுக் காவல் புரளிக்கு பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான புரளிக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார். ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட நகரில் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு சீனா திரும்பும் எவரும் கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 7 … Read more

சிரியா கடலில் மூழ்கி 100 அகதிகள் பலி| Dinamalar

டமாஸ்கஸ்: மேற்காசிய நாடான லெபனானில் உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். மத்திய தரைக்கடலில் சட்டவிரோதமாக படகுகளில் செல்லும் பலர், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த வாரம் 150 பேருடன் லெபனானில் இருந்து சென்ற படகு, அதன் அண்டை நாடான சிரியாவின் கடற்கரை நகரான டார்டவுஸ் அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. உடனடியாக 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். … Read more

ஈரானில் 75 பேர் உயிரிழப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தெஹ்ரான் : ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கி கட்டாயமாக அணிய வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. … Read more

விண்கற்களை திசை திருப்பிநாசா விண்கலம் சாதனை| Dinamalar

வாஷிங்டன், :பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை திசை திருப்பி விடும், ‘நாசா’வின் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில், நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி அமைப்பு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பூமியை விண்கற்கள் தாக்குவதை தடுப்பது குறித்து நாசா ஆய்வு செய்தது. இதன்படி, ‘டார்ட்’ எனப்படும், விண்கற்களை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த முறையில், விண்கலத்தை வேகமாக மோதச் செய்து, விண்கல்லை அதன் பாதையில் இருந்து திசை திருப்பப்படும்.பூமியில் இருந்து, 1.1 … Read more

சிரியா கடலில் மூழ்கி100 அகதிகள் பலி| Dinamalar

டமாஸ்கஸ்,:லெபனானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில், நேற்று வரை 100 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்காசிய நாடான லெபனானில் உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். மத்திய தரைக்கடலில் சட்டவிரோதமாக படகுகளில் செல்லும் பலர், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.கடந்த வாரம் 150 பேருடன் லெபனானில் இருந்து சென்ற படகு, அதன் அண்டை நாடான … Read more

பொதுவெளியில் தோன்றிய அதிபர்… வீட்டுக் காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த உலகத் தலைவரையும் சந்திக்கவில்லை, அவர் சார்ந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைக் கூட அவர் பார்க்கவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 14 இல் அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு விமானம் மூலம் மத்திய ஆசியாவுக்குப் புறப்பட்ட ஜி ஜின்பிங், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் … Read more

வெளியே வந்தார் சீன அதிபர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங், :சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுநிகழ்ச்சியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.சீன ராணுவத்தால் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஜி ஜின்பிங்கும் பொது வெளியில் தோன்றவில்லை. இந்நிலையில் செப். 16க்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சி ஒன்றில் … Read more

ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் ராணுவ வீரர் – கண்கலங்க வைக்கும் புகைப்படம்!

ரஷ்யாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய … Read more

வங்கதேச படகு விபத்துபலி 49 ஆக அதிகரிப்பு| Dinamalar

டாக்கா, :வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் நேற்று முன் தினம் மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர் பயணம் செய்துள்ளனர். படகு, நடு ஆற்றில் சென்ற போது அதிக பாரம் காரணமாக திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த பயணியர் நீரில் … Read more

கடலுக்கடியில் வெடித்த எரிமலை – பசிபிக் பெருங்கடலில் உருவான தீவு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றைக் கக்கத் தொடங்கியது. அவை கடலில் கலந்து நீரின் நிறத்தை மாற்றி விட்டன. இந்த எரிமலை வெடித்த 11 மணி நேரத்திற்குப் பிறகு, … Read more