தொற்றா நோய்களால் 2 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழக்கிறார்: உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா: உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தொற்றா நோய்களான இதய பாதிப்பு, புற்றுநோய், நுரையீறல் பாதிப்பு ஆகியவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நிகழும் … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நெப்டியூன் கோளின் துல்லிய படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இந்த படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு தண்டனை: ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுகிறது. அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம். எங்கள் பிராந்தியத்தை களவாடும் முயற்சிக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும். ஆயிரகணக்கான மக்களை கொன்றதற்காக தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் உள்ளிட்ட அனைத்து … Read more

சொத்து சேர்க்காத மோடி: பாராட்டிய இம்ரான்கான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‛உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் வெளிநாடுகளில் இவ்வளவு சொத்துக்கள் இல்லை, ஏன், இந்திய பிரதமர் மோடிக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள்’ என பிரதமர் மோடி வெளிநாடுகளில் சொத்து சேர்க்காதது குறித்து பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு … Read more

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தை கட்டுப்படுத்த சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் … Read more

தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்

ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி, தனது பெற்றோருடன் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரின் பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதே. மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் குற்றம் சாட்டி இந்த சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.  போலீஸ் காவலில் … Read more

ஐ.நா. கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி ரஷ்யா மீறியுள்ளது: புதின் மீது பைடன் தாக்கு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் கொள்கைகளை சிறிதும் வெட்கமில்லாமல் ரஷ்யா மீறியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் பைடன் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்தார். ஜோ பைடன் பேசும்போது, “ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷ்யாவை யாரும் … Read more

Neptune: நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் அவிழ்க்கும் ஜேம்ஸ் வெப்

James Webb Telescope Image Of Neptune: நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைகாட்சி புகைப்படங்களாக பதிவு செய்து அனுப்பி உள்ளது. 2022  செப்டம்பர் 21ம் நாளன்று நாசா வெளியிட்ட இந்த புகைப்படம் வைரலாகிறது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், நெப்டியூனின் வளையங்களைக் காட்டுகிறது.  மிகவும் அதிக உயரத்தில் உள்ள மீத்தேன்-பனியைக் காட்டும் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரகாசமான புள்ளிகளின் வரிசையைக் காட்டும் படம் இது என்பதால் அனைவருக்கும் இது … Read more

3,00,000 வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ :உக்ரைன் மீதான போர் துவங்கி, ஏழு மாதங்கள் எட்டியுள்ள நிலையில், தன் ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. இந்நிலையில், நேற்று ‘டிவி’ வாயிலாக, நாட்டு மக்களிடையே பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து … Read more

போருக்காக மன்னிப்பு கேட்பதோடு; இழப்பீடும் தர வேண்டும்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி நிபந்தனை

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட உரை அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் போருக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்பதோடு, போர் சேதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரினார். கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணொலியில் மட்டுமே நடந்துவந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் இந்த ஆண்டு நேரடியாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இதில் உரையாற்றிய தலைவர்கள் பலரும் ரஷ்ய போருக்கு கண்டனம் தெரிவித்து … Read more