பாகிஸ்தானில் பலத்த மழையில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பரவலாக நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 2 பேர் பலியாகி உள்ளதை மீட்பு படையினர் உறுதிப்படுத்தினர். … Read more