சீன உளவு கப்பல் இலங்கை வரவில்லை| Dinamalar
கொழும்பு:சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5′ திட்டமிட்டபடி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை’ என, துறைமுக நிர்வாகம் தெரிவித்தது.சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, அம்பன்தோட்டா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது. … Read more