இலங்கையில் மின்சார கட்டணம கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அங்கு யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 9 வருடங்களுக்கு பிறகு ஏற்றப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.  Source link

சீனாவுக்கு அடிபணிய மாட்டோம் தைவான் அமைச்சர் உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே : “சீனாவின் முயற்சி பலிக்காது; நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்,” என, தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை … Read more

சீனாவின் சுற்றுலா தலமான சன்யாவில் ஊரடங்கு அமல்.. 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு, சன்யாவுக்கு வரும் விமானங்களும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், அங்கு சுமார் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

ஈரான் செயற்கைக்கோள் ஏவிய ரஷ்யாவுக்கு உதவுமா?| Dinamalar

மாஸ்கோ:ஈரானிய செயற்கைக்கோளை, ரஷ்யா வெற்றி கரமாக விண்ணில் ஏவியது. இந்நிலையில், இது உக்ரைனை கண்காணிக்க, ரஷ்யாவுக்கு பயன்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானின் ‘கயாம்’ செயற்கைக்கோளை, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இருந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக ஏவியது. இது, சுற்றுவட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டது.‘அதி நவீன கேமராக்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள், சுற்றுச் சூழலை கண்காணிக்க பயன்படுத்தப்படும்; தங்களைத் தவிர, மற்ற நாடுகள் இந்த செயற்கைக் கோளை … Read more

மட்டக்களப்பில் மருத்துவமனைசத்ய சாய் அறக்கட்டளை திறப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் உள்ள மட்டக்களப் பில், முழுதும் இலவச சிகிச்சை அளிக்கும் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையை ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை துவக்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை சார்பில், இலங்கையில் மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக, ஸ்ரீ சத்ய சாய் கருணாலயம் மருத்துவ மையம், 2017ல் துவக்கப்பட்டது. இதுவரை, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையம் சார்பில் மட்டக்களப்பில், ஸ்ரீ … Read more

ஆவணங்களை எடுத்துச் சென்றாரா?மாஜி அதிபர் வீட்டில் சோதனை!| Dinamalar

வாஷிங்டன்:மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்தவர், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 76. கடந்த, 2020 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில், இவர் தோல்வியடைந்தார்.அமெரிக்க சட்டங்களின்படி, அதிபர் பதவியில் இருந்து வெளியேறுபவர், பதவிக் காலத்தின் போது கையெழுத்திட்ட கோப்புகள் உள்ளிட்டவற்றை, தேசிய ஆவணக் … Read more

கர்ப்பிணியை உதைத்த காவலர் பாக்.,கில் கைது| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் கர்ப்பிணியை உதைத்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலரை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சனா என்ற பெண் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் இவர் அதிகாலை 5:00 மணிக்கு தன் 5 வயது மகனுடன் குடியிருப்புக்கு வந்தார். அப்போது, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் சனாவை உள்ளே விட மறுத்து வாக்குவாதம் செய்தனர். அவரை விரட்ட காவலருக்கு உத்தரவிட்டனர். … Read more

கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு- வெளியேற முடியாமல் சிக்கிய 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

பெய்ஜிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு தொற்று பரவல் வேகம் குறைந்தாலும் தற்போது சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இதனால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ‘சீனாவின் ஹவாய்’ என்று அழைக்கப்படும் சன்யா என்ற பிரபல சுற்றுலத் தளம் உள்ளது. சீனாவின் தெற்கு … Read more

ரியல் எஸ்டேட் துறையில் திவாலாகும் சீன நிறுவனங்கள்.. பல துறைகளில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா வர வாய்ப்பு..!

சீனாவின் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பெரும் நிறுவனங்கள் திவாலாகும் நிலையை நோக்கி செல்லும் நிலையில், எஃகு ஏற்றுமதியில் சீனாவிற்கு மாற்றாக இந்தியா வர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகளவில், மொத்த எஃகு உற்பத்தியில் 57 சதவீதம் சீனா வகிக்கும் நிலையில், அந்நாட்டில் 30 சதவீத எஃகு உற்பத்தி நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையை நம்பி உள்ளன. தற்போது சீன ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீவிரமாகி வரும் நிலையில், பல நிறுவனங்கள் திவாலாகும் … Read more

ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியா விமான தளத்தில் தொடர் குண்டு வெடிப்பு| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. முன்னாள், ‘சோவியத் யூனியனில்’ இருந்த, உக்ரைன் நாட்டின், ஒரு பகுதியான கிரிமியா, ரஷ்யாவுடன், சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. இப்பகுதியில் இன்று விமான தளத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஒரு பலியானதாகவும், பலர் காயமடைந்ததாக மாஸ்கோ டைம்ஸ் … Read more