தேச துரோக குற்றச்சாட்டில் ரஷ்ய விஞ்ஞானி கைது| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் ஆராய்ச்சியாளர் அனடோலி மஸ்லோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து வருகிறது. தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த ரகசியங்களை சில விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்பதாக அரசுக்கு சந்தேகம் எழுந்தது. … Read more

ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜவாஹிரி உடல் கிடைக்கவில்லை – தாலிபான்

அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் உடல் கிடைக்கவில்லை என, தாலிபான் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு பிறகு, அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவர், பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவரை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து தேடி வந்தது. இதை … Read more

கோவிட் ; நலம் பெற்றார் பைடன்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவர் ஜூலை 27ம் தேதி குணமடைந்தார். இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் ஜூலை 31ம் தேதி கோவிட் உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து ஜோ பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இன்று (ஆக., 7) கோவிட் பரிசோதனை … Read more

தீவிரமாக சேதமடைந்த உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம்: ஒரு உலை மூடப்பட்டது

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (2022 ஆகஸ்ட் 5)  ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் “கடுமையான சேதத்தை” அடைந்தது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று … Read more

US Shooting: அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்ட போதிலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ நகரில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் … Read more

ஹாலிவுட் நடிகை ஆன் ஹெஸ் கார் விபத்தில் பலத்த காயம்| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருபவர் நடிகை ஆன் ஹெஸ், 53. சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ், டோனி பிராஸ்கோ, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஆன் ஹெஸ் சென்ற கார், நேற்று முன்தினம் அடுக்கு மாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் ஆன் ஹெஸ்சை மீட்டு … Read more

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் ரவி குமார், வினேஷ், நவீன் தங்கம்| Dinamalar

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ரவி குமார், வினேஷ் போகத், நவீன் தங்கம் வென்றனர். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான மல்யுத்தம் ‘பிரீஸ்டைல்’ 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவி குமார், நைஜீரியாவின் எபிகேவெனிமோ வெல்சன் மோதினர். அபாரமாக ஆடிய ரவி குமார் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், காமன்வெல்த் விளையாட்டில் தனது … Read more

பயிற்சி என்ற பெயரில் அச்சுறுத்தும் சீனா; பதிலடிக்கு தயார் என தைவான் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங் : சீன கடற்படை தங்கள் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது, தங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போல இருக்கிறது என தைவான் தெரிவித்துஉள்ளது.நம் அண்டை நாடான சீனா, தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவான் வந்தார். அவரது வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானில் இருந்து சென்ற … Read more

காமன்வெல்த் கிரிக்கெட்டில் அசத்தல்; பைனலில் இந்திய பெண்கள் அணி| Dinamalar

பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. காமன்வெல்த்தில் முதன் முறையாக பெண்கள் ‘டி-20’ கிரிக்கெட் அறிமுகம் ஆனது. இதன் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா 23வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது அதிவேக அரைசதம். மந்தனா 32 பந்தில் 61 ரன் விளாசினார். ஷபாலி (15), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), தீப்தி (22) சற்று கைகொடுத்தனர். முதல் 6 … Read more

பதிலடிக்கு தயார் என தைவான் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்-சீன கடற்படை தங்கள் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது, தங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போல இருக்கிறது என தைவான் தெரிவித்துஉள்ளது. நம் அண்டை நாடான சீனா, தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவான் வந்தார். அவரது வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானில் இருந்து சென்ற மறுநாளே, … Read more