மாலத் தீவுக்கு ரூ.786 கோடி கடன் உதவி – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி: மாலத் தீவுக்கு கூடுதலாக ரூ.786 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவின் லட்சத் தீவுகளுக்கு தெற்கே மாலத் தீவு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மாலத் தீவின் தலைநகர் மாலியுடன் 3 தீவுகளை இணைக்கும் புதிய பாலத்தின் … Read more

நான்சி பெலோசியின் தைவான் வருகை | உலகமே உற்றுநோக்கிய விமானம் – திக்.. திக்.. 'தைபே' நொடிகள்

தைபே: சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் மண்ணை தொட்டுள்ளார். நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்தடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக, நான்சி தைவான் செல்வார் எனச் சொல்லப்பட்டபோதே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகளை மீறி, தைவான் … Read more

'ஒசாமா பின்லேடனுக்கு போடப்பட்ட அதே பிளான்' – அல்-காய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட பின்னணி

காபூல் / வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் தலைமைப்பொறுப்பை ஏற்ற அய்மான் அல்-ஜவாஹிரி (71), கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அல்-காய்தாவின் புதிய தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார். கடந்த 2001 செப். 11-ல் அமெரிக்காவில் அல்-காய்தா நடத்திய தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த … Read more

கோத்தபயவுக்கு சலுகையில்லை: சிங்கப்பூர் திட்டவட்டம்| Dinamalar

சிங்கப்பூர்:’இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிறப்பு சலுகைகள், கூடுதல் பாதுகாப்பு, அரசு முறையிலான விருந்தோம்பல் ஆகிய எதுவும் வழங்கப்படவில்லை’ என, சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் போராட்டத்திற்கு பயந்து, கடந்த மாதம் மாலத்தீவிற்கு தப்பியோடினார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, தன் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். இந்நிலையில், சிங்கப்பூர் பார்லி.,யில், வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியதாவது: வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் … Read more

தங்க கட்டியில் விநாயகர்பிரிட்டன் அரசு வெளியீடு| Dinamalar

லண்டன்:பிரிட்டனைச் சேர்ந்த, ‘ராயல் மின்ட்’ நிறுவனம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்துக் கடவுள் விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது. ஐரோப்பாவில், பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது. அதுபோல வரும் 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது. 24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்கக் கட்டியின் எடை 20 கிராம். இதன் … Read more

செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்று ஆட்டம் ; உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5ஆவது சுற்று ஆட்டத்தில், நார்வேயை சேர்ந்த உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், ஜாம்பியா அணி வீரரை வீழ்த்தினார். முன்னதாக, இந்திய ஓபன் ‘பி’ பிரிவு வீரர்கள் விளையாடும் போட்டிகளை கார்ல்சன் சிறிது நேரம் கவனித்துச் சென்றார். இந்திய அணி ஸ்பெயினுடன் விளையாடிய போட்டிகளும், கார்ல்சன் விளையாடிய போட்டியும் ஒரே அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாடிய … Read more

காமன்வெல்த் பளுதூக்குதல்: வெள்ளி வென்றார் விகாஷ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் ஆண்களுக்கான 96 கிலோ பிரிவு பளுதுாக்குதலில் இந்தியா சார்பில் விகாஷ் தாகூர் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 155 கிலோ துாக்கினார் விகாஷ். அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 191 கிலோ துாக்கினார். மொத்தம் 346 கிலோ துாக்கிய விகாஷ், இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஹர்ஜிந்தர் ‘வெண்கலம்’ பெண்களுக்கான 71 கிலோ பிரிவு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 93 … Read more

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்திய அணி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் செயின்ட் கிட்ஸ்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடி கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றது. மூன்றாவது போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ‘பவுலிங்’ தேர்வு … Read more

டேபிள் டென்னிசில் மீண்டும் தங்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய ஆண்கள் அணி, நைஜரை சந்தித்தது. முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 என போடு, ஒலாஜைடு ஜோடியை வென்றது. முதல் ஒற்றையர் போட்டியில் அஜந்தா சரத்கமல், 3-1 என காட்ரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சத்யன் 3-1 என … Read more

பாக்., ஹெலிகாப்டர் விபத்து கமாண்டர் உட்பட 6 பேர் பலி| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், ராணுவ கமாண்டர் உட்பட, ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆறு பேரும் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கன மழை மற்றும் வெள்ளத்திற்கு, 147 பேர் பலியாகியுள்ளனர்; ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்பார்வையிட, லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உட்பட ஆறு ராணுவ வீரர்கள், உத்தல் பகுதியில் இருந்து கராச்சிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஆனால், … Read more