பார்வையாளர்களை கவரும் பிறந்து 2 வாரங்களே ஆன வங்காளப் புலிக்குட்டி!

கியூபாவின் ஹவானா பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில்  பிறந்துள்ள அரிய வகை வங்காளப் புலிக் குட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்த 4 புலிக்குட்டிகளில் இது மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் மற்றவை நரம்பியல் பாதிப்புகளால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புலிக்குட்டியும் எடைக்குறைவாக இருப்பதால் செயற்கை இனப்பெருக்க பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அது மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். Source link

பாதியாகக் குறைந்த ஆசியாவின் பணக்கார பெண்மணியின் சொத்து மதிப்பு… ஆனாலும் ‘யாங் ஹுய்யன்’ தொடர்ந்து முதலிடம்

சீனாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக ஆசியாவின் பணக்கார பெண்மணியான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு பாதியாக குறைந்துள்ளது. வீடு விற்பனையில் சரிவு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் கட்டுமானம் நிறைவு பெறாத வீடுகளின் உரிமையாளர்கள் தவணை செலுத்த மறுப்பது போன்ற காரணங்களால் அந்நாட்டின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான Country Garden Holdings-ன் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்தது. இதனால், அந்நிறுவனத்தின் உரிமையாளரான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு … Read more

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில், ரஷ்ய படைகளால் சிறை பிடிக்கப்பட்டிருந்த உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது உக்ரைன் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த உக்ரைனிய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலனிவ்கா (Olenivka) நகரில் உள்ள அந்த சிறைச்சாலை மீது, அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹிம்மர் வாகனங்கள் மூலம் உக்ரைன் படைகள் ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டிருந்த உக்ரைன் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், … Read more

இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை அதிகரிக்கும் ரஷ்யா..!

இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா அதிகரித்து வருகிறது. இந்தியா ஆண்டுக்கு மொத்தம் 23 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. அதில்,16 சதவீதம் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 கோடியே 20 லட்சம் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்து இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 லட்சம் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரலில் 30 லட்சம் … Read more

தங்கும் விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 8 பேர் உயிரிழப்பு| Dinamalar

மாஸ்கோ:ரஷ்யாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின், மாஸ்கோ நகரில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள், மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒரு விடுதியில் நேற்று திடீரென தீ விபத்துஏற்பட்டது. இங்கிருந்த 200க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். ஆனால், முதல் மாடியில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறக்க முடியாததால், எட்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்; காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து … Read more

நெருப்புடன் விளையாட வேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்:’தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்து, நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்கா தலையிடும் இதற்கிடையே, 1997ல், அப்போதைய அமெரிக்க பார்லி., சபாநாயகர் நியூட் கிங்ரிச் தைவான் சென்றார். ‘சீனா தைவானை தாக்க முயன்றால், அமெரிக்கா தலையிடும்’ என … Read more

முறைகேடாக பெறப்பட்ட நிதியில் இங்கிலாந்தில் ரூ1,000 கோடிக்கு சொத்து வாங்கிய தொழிலதிபர்..!

DHFL மற்றும் ரேடியஸ் குழுமத்திலிருந்து முறைகேடாக பெறப்பட்ட நிதி மூலம் இங்கிலாந்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தொழிலதிபர் அவினாஷ் போசலே வாங்கியதாக சிபிஐ  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  எஸ் வங்கி மற்றும்  DHFL குழுமம் பல்வேறு நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகளை முறைகேடாக கடனாக வழங்கி ஊழல் செய்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வந்தது. இதில், ஏபிஐஎல் குழும நிறுவனர் அவினாஷ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், டிஎச்எஃப்எல் … Read more

இந்திய அணி அசத்தல் வெற்றி| Dinamalar

டிரினிடாட்: முதல் ‘டி-20’ போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் ‘ஈஸியா’ வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. டிரினிடாட்டில் முதல் போட்டி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் அறிமுகமானார். கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், இந்திய ‘லெவன்’ அணிக்கு திரும்பினர். ‘டாஸ்’ வென்ற … Read more

“2020-21-ல் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி நேரடி முதலீடு” – மத்திய அரசு

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நேரடி அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தி துறையில் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 27 சதவிகிதமும், அமெரிக்காவிலிருந்து 18 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கம்பியூட்டர் சாப்ஃட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் 25 சதவிகிதம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. Source link

இலங்கைக்கு கடன் உலக வங்கி மறுப்பு| Dinamalar

கொழும்பு:’நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தேவையான கொள்கைகளை செயல்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய கடன்கள் வழங்கப் போவது இல்லை’ என, உலக வங்கி அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. இதையடுத்து, அந்நாடு கடந்த ஏப்ரலில் அன்னிய கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு ஆளானது. இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களில், 37 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more