கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது: துபாயில், இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து

துபாய், கனமழை பாதிப்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மீண்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி பால் கிரிப்பித்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதில் பல்வேறு விமானங்கள் ரத்து … Read more

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து.. புதிய மசோதா நிறைவேற்றம்

லண்டன்: வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். எனவே, சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2022-ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது இதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வரும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் வணிகத்தை முறியடிக்கவும் ருவாண்டா திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து … Read more

பிரான்சில் இருந்து இங்கிலாந்து நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி பலி

பாரிஸ், ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையிலும் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். பிரான்ஸ் – இங்கிலாந்து இடையேயான கடல் பகுதியில் இங்கிலீஷ் சேனல் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய அகதிகள் முயன்றனர். அப்போது, … Read more

இங்கிலிஷ் கால்வாயை கடக்க முயன்ற 5 பேர் பலி – பிரிட்டனில் மசோதா ஒப்புதலான நாளில் துயரமும் பின்புலமும்

லண்டன்: இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன. பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்து கவனம் பெற்றுள்ளது. படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று … Read more

ஐரோப்பா செல்லும் இந்தியர்கள்… ஒரே விசாவில் 29 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!

Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தைவானில் மீண்டும் நிலநடுக்கம்: அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி

தைபே: தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. முன்னதாக, கடந்த 3 ஆம் தேதி தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. … Read more

மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) நடந்தது. அப்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் காற்றாடி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு பேரை ஏற்றிச் சென்ற HOM M503-3 ரக ஹெலிகாப்டர் … Read more

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-வது இடம்

புதுடெல்லி: அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெச்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ம்ஆண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி பேர்அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33.33 கோடியில் 14 சதவீதம் ஆகும்.மொத்த வெளிநாட்டவர்களில் 53 சதவீதம் அதாவது 2.45 கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்துள்ளது. அமெரிக்க … Read more

குவைத்தில் முதல்முறையாக இந்தி மொழி வானொலி சேவை

புதுடெல்லி: குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது. குவைத்தில் முதல்முறையாக இந்தி வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. குவைத் வானொலியில் எஃப்.எம். 93.3 மற்றும் ஏ.எம். 96.3 ஆகிய அலைவரிசைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப குவைத் தகவல் தொடர்பு அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கையை இந்திய தூதரகம் பாராட்டுகிறது. இதன் பொருட்டு முதல் நிகழ்ச்சி கடந்த 21 ஏப்ரல் அன்று இரவு 8:30 முதல் 9 மணி வரை ஒலி பரப்பு … Read more

அமெரிக்கா: கார் விபத்தில் சிக்கி 2 இந்திய மாணவர்கள் பலியான சோகம்

நியூயார்க், இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் முக்கா நிவேஷ் (வயது 19) மற்றும் கவுதம் பார்சி. நிவேஷ், கரீம்நகர் மாவட்டத்தின் ஹுசுராபாத் நகரை சேர்ந்தவர். கவதம், ஜங்காவன் மாவட்டத்தின் ஸ்டேசன் கான்பூர் நகரை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர். இந்நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த … Read more