ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் 2021ல் முற்றிலும் அழிக்கப்பட்ட ஆப்ரிக்க ராட்சத நத்தை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் அதிக அழிவை ஏற்படுத்தும் நத்தையாக உள்ளது. இது 500 விதமான தாவரங்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவை எலி நுரையீரல் புழு ஓட்டுண்ணியை தன் … Read more

வயதுமுதிர்வு மற்றும் உடல்நிலை பிரச்சினையால் பதவி விலகலா..? போப் ஆண்டவர் பதில்!

போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 85 வயதாகும் போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினை காரணமாக கோடை இறுதியில் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள போப் ஆண்டவர், “பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் மனதில் நுழையவே இல்லை” என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 24 முதல் 30-ந்தேதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கு பிறகு உக்ரைன் மற்றும் … Read more

நடுக்கடலில் மூழ்கிய 30 பணியாளர்களுடன் சென்ற கப்பல்.. 12 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு.!

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளர்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் மூழ்கிய சம்பவத்தில், 12 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஹாங்காங் அருகே சாபா சூறாவளி உருவாக்கிய ராட்சத அலைகளால் தொழில்துறை பயன்பாட்டுக் கப்பல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து 4 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 12 பேரின் … Read more

லெபனானில் சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்ட 31 பேர் கைது..!

பெய்ருட், லெபனான் அரச பாதுகாப்பு, நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. வடக்கு நகரமான கலாமூனில் இருந்து படகு மூலம் லெபனானில் இருந்து தப்பிக்க முயன்றனர். விசாரணை மற்றும் பிற சட்ட நடைமுறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக லெபனானில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர். அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இந்த சம்பவத்தில், 6 பேர் … Read more

வயது முதிர்வால் பதவி விலகலா? போப் ஆண்டவர் பதில்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 85 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என … Read more

அமெரிக்கா: சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 246-வது சுதந்திர தினம் இன்று (இந்திய நேரப்படி நேற்று) கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திரதின அணிவகுப்பு இன்று காலை 10 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) தொடங்கியது. அப்போது, சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த நபர் … Read more

அமெரிக்க குடியுரிமையை அதிகம் விரும்பும் இந்தியர்கள்..!

வாஷிங்டன், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியர்கள் பலரும் அமெரிக்க குடியுரிமையை விரும்பி பெற்றுள்ளனர். அமெரிக்கா 246-வது சுதந்திரதினத்தை கொண்டாடி வருகிறது. அமெரிக்க குடியுரிமை பெறும் வெளிநாட்டினரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் வரவேற்பது வழக்கம். அந்த வகையில் 32 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற அதிகம் விரும்பி வரும் வெளிநாட்டினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். நடப்பு … Read more

பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பிய தினம்| Dinamalar

5 ஜூலை 1954 இல் பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பு தொடங்கியது: இது ஒரு நிறுவனமாக உருவாகி காலத்தின் சோதனையாக நிற்கும் ஒரு கண்டுபிடிப்பாகும்.29 வயதான முன்னாள் ஹோம் சர்வீஸ் வானொலி அறிவிப்பாளர் ரிச்சர்ட் பேக்கர் தான் முதலில் செய்தியைப் படித்தார் முதல் பதிப்பு ஹனோய் அருகே (வியட்நாம் போரின் போது) போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகள் மற்றும் துனிசியாவில் பிரெஞ்சு துருப்பு நகர்வுகள் பற்றிய செய்தியுடன் தொடங்கியது. முதல் தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் உலகளாவிய … Read more

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய சுதந்திர தின அணிவகுப்பு நடந்து வருகிறது. அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்ச உணர்வு எழுந்தது. ஐலேண்ட் பூங்காவில் … Read more