உலக செய்திகள்
ரிஷாப் பன்ட் சதம்: கோப்பை வென்றது இந்தியா| Dinamalar
மான்செஸ்டர்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷாப் பன்ட் (125*), ஹர்திக் பாண்ட்யா(71 ரன், 4 விக்.,) அசத்த, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தொடர், 1-1 என சமனில் இருந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் … Read more
வரலாற்று நாயகர் மண்டேலா! இன்று மண்டேலா பிறந்த தினம்| Dinamalar
நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜீலை மாதம் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா. பழங்குடி இனமக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களம் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் பள்ளி … Read more
கோவிலில் தாக்குதல்வங்கதேசத்தில் கலவரம்| Dinamalar
டாக்கா-வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நரைல் மாவட்டம் சஹபரா என்ற கிராமத்தில் வசித்த ஒரு இளைஞர், சமூக வலைதளத்தில் மத உணர்வை துாண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார். இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அந்தக் கிராமத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஹிந்து … Read more
பாக்.,கில் உள்ள மூதாதையர் இல்லத்துக்கு 75 ஆண்டுகளுக்கு பின் சென்ற மூதாட்டி| Dinamalar
புதுடில்லி-பாகிஸ்தானின் ராவல்பிண்டியில், சிறு வயதில் வாழ்ந்த மூதாதையர் வீட்டை காண ஆசைப்பட்ட, புனேயைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியின் கனவு நிறைவேறியது. போர் பதற்றம் மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்தவர் ரீனா சிப்பர் வர்மா, 90. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன், இவரது குடும்பம், பாக்.,கின் ராவல்பிண்டியில் வசித்தது. 1947 பிரிவினைக்கு பின் இந்தியாவில் குடியேறியது. அப்போது ரீனாவுக்கு 15 வயது. 1965ல் மீண்டும் பாகிஸ்தான் சென்று, தன் மூதாதையர் வீட்டை காண, ரீனா ஆசைப்பட்டார்.அப்போது, இந்தியா … Read more
சூடானில் இரு பழங்குடி குழுக்களிடையே மோதல் – இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
சூடான் தெற்கு மாகாணத்தில் பழங்குடியினர் இடையே மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் இராணுவ புரட்சிக்குப் பின்னர் கொந்தளிப்பில் உள்ள ஒரு நாட்டில் சமீபத்திய இரத்தக்களரி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் உள்ளூர் அரசாங்கத்தின் அறிக்கையின்படி, ப்ளூ நைல் மாகாணத்தில் ஹவுசா மற்றும் பிர்டா ஆகிய இனக்குழுக்களுக்கு இடையிலான சண்டை இந்த வார தொடக்கத்தில் ஒரு விவசாயி கொல்லப்பட்டதில் இருந்து வளர்ந்தது. இந்த மோதலில் குறைந்தது 39 பேர் காயமடைந்தனர் மற்றும் ரோசியர்ஸ் நகரில் உள்ள … Read more
மிக ஆபத்தான 12 டன் சரக்குகளுடன் கிரீஸில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் சரக்கு விமானம்
கிரீஸ் சரக்கு விமானம் விபத்து: வடகிழக்கு கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். கிரேக்க அரசின் ஒளிபரப்பு நிறுவனமான ஈஆர்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் அன்டோனோவ் ஏ-12, (Antonov An-12) ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிக்கொண்டு பங்களாதேஷுக்குச் சென்று கொண்டிருந்தது. செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு பறந்து கொண்டிருந்த போது, கிரீஸில் உள்ள பேலியோச்சோரி கிராமத்திற்கு அருகே விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறங்கும் … Read more
மீண்டும் கொரோனா அலைக்கு வாய்ப்பு?- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனா வின் புதிய அலை சாத்தியமாகும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.கடந்த வாரம் உலக சுகாதார நிறுவன ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் பத்து வாரங்கள் சரிவைக் குறித்தது. பயணம், கூட்டங்கள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்துதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஐரோப்பாவில் 10% அதிகரித்துள்ளது.”இந்த புள்ளிவிவரங்களுடன், தொற்றுநோய் எங்கும் முடிந்துவிடவில்லை” என்று டாக்டர் க்ளூஜ் எச்சரிக்கிறார். டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் … Read more
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன்: சிந்து சாம்பியன்| Dinamalar
கோலாலம்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இன்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சிங்கப்பூரில் ‘சூப்பர் 500’ சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து பின்னர் அதிரடி காட்டி, 11-2 என முன்னிலை வகித்தார். … Read more
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத் தீ -ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்!
சனிக்கிழமை அன்று தென்மேற்கு பிரான்சில் காட்டுத் தீ பரவியது. ஜிரோண்டே பகுதியில் கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேர் தீப்பிடித்தது. சனிக்கிழமை காலை வரை 12,200 க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். “வானிலை நிலை மற்றும் தீ தொடங்குவதற்கான முக்கியமான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் தொழில்முறை மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்காக காடுகளுக்குள் நுழைவதை தற்காலிகமாகத் தடுத்துள்ளனர்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த … Read more