சோகத்துடன் ஓட்டு போட்ட மக்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை தேர்தல் நடந்தது. பல இடங்களில் மக்கள் சோகத்துடன் ஓட்டு போட்டதை காண முடிந்தது. இறுதி அஞ்சலி ஜப்பான் மேல்சபையின், 124 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் மறைந்த ஷின்சோ அபேயின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் அந்நாட்டில் அதிக முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. கோல்டன் விசா என்பது ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, … Read more

ஷின்சோ அபேவுக்கு தலைவர்கள் அஞ்சலி: ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தல் திட்டமிட்டபடி நடந்தது

டோக்கியோ: ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு முக்கிய பிரமுகர்கள் நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றது. இன்று முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ (67)கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார். … Read more

அடுத்த பிரிட்டன் பிரதமர் பதவி யாருக்கு? போட்டியில் 10 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில், 10 பேர் களமிறங்கியுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் பழமைவாத கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு போட்டியிட, முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, ரிஷி சுனக் ஆதரவு திரட்டத் துவங்கியுள்ளார். போரிஸ் ஜான்சனைத் தொடர்ந்து பழமைவாத கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவரே, பிரதமராக முடியும். அதனால், பழமைவாத … Read more

இலங்கை அரசியல் தலைவர்களுக்கு போப் ஆண்டவர் வேண்டுகோள் 'ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம்'

வாடிகன் சிட்டி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், ஆள்வோருக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவு நாடான அங்கு பெரும் அரசியல் மற்றும் சமூக குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து … Read more

தெ.ஆப்பிரிக்க துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள சோவெட்டோ நகரில் மதுக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், காயமடைந்தவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் கள் எத்தனை பேர் … Read more

மதுபான விடுதியில் 15 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

ஜோஹன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவில், மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 15 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், சோவெட்டோ பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துஉள்ளது. இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சோவெட்டோவில் இயங்கும் மதுபான விடுதிக்கு, ஒரு ‘மினி பஸ்’சில் வந்த சிலர், திடீரென சரமாரியாக சுட்டனர். இதில், மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், பணியாட்கள் உள்ளிட்டோர் குண்டு பாய்ந்து பலியாகினர். இரவு நேரம் … Read more

மலைக்க வைக்கும் மக்கள் தொகை :இன்று (ஜூலை 11 ) உலக மக்கள் தொகை தினம்| Dinamalar

உலகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகை தினம் 2022 தீம் 2022 ஆம் ஆண்டின் உலக … Read more

உக்ரைனில் 15 பேர் பலி| Dinamalar

கீவ் : உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள், 15 பேர் பலியாகினர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போரில், கடந்த வாரம், லுஹன்ஸ்க் மாகாணத்தின் கடைசி நகரமான லைசிசான்ஸ்க்கும் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. இதன் வாயிலாக உக்ரைன் ராணுவத்தை எதிர்த்து, எட்டு ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வரும் டோன்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி ரஷ்யா வசம் வந்துள்ளது. … Read more

விம்பிள்டன்: ஜோகோவிச் சாம்பியன்| Dinamalar

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் ஆஸ்திரேலியாவின் கியரியாசை தோற்கடித்தார். இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. சமீபத்தில் நுாற்றாண்டு விழா கொண்டாடிய ‘சென்டர் கோர்ட்’ அரங்கில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-3’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 40வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கியரியாஸ் மோதினர். முதல் செட்டை கியரியாஸ் 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி … Read more