திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி.. பிலிப்பைன்ஸ் அழகி வெற்றி..!

தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம் வென்றார். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில் 22 அழகிகள் கலந்து கொண்ட நிலையில் பிலிப்பைன்சை சேர்ந்த தொழில்முனைவோர் பிலிப்பினா ரவேனா, சர்வதேச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முடி சூடப்பட்டார். கொலம்பியா மற்றும் பிரான்ஸ் அழகிகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றனர். Source link

திறந்து வைத்தார் பிரதமர் ஹசீனா| Dinamalar

தாகா: வங்கதேசத்தின் மிக நீண்ட பாலமான ‘பத்மா’ பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6.15 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதியாக பார்க்கப்படுகிறது.இரண்டு அடுக்குகளை உடைய இந்த பாலத்தின் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகல்..!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. தொடரில் பங்கேற்க இதுவரை 187 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சீனா தொடரில் இருந்து விலகி உள்ளது. Source link

நார்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்| Dinamalar

ஓஸ்லோ-ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துஉள்ளனர். மதுபான விடுதிநார்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள, ‘லண்டன் பப்’ எனப்படும் மதுபான விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சுடப்படும் சத்தம் கேட்டது.ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் அந்த மதுபான விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை – 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு ரோ வெர்சஸ் வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பன உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், மிசிசிபி … Read more

உணவுப் பற்றாக்குறை : உலக நாடுகள் பொருளாதார தடைகளை திரும்பப் பெற தாலிபான்கள் கோரிக்கை..!

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, உலக நாடுகள் பொருளாதார தடைகளை திரும்பப் பெற வேண்டும் என தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவுப் பற்றாக்குறையால் திணறி வரும் ஆப்கானை நிலநடுக்கம் தாக்கி மேற்கொண்டு மேல்எழ முடியாத அளவில் பாதாளத்தில் வீழ்த்தியது. மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் முடக்கிய ஆப்கான் மத்திய வங்கியின் பில்லியன் டாலர் கணக்கிலான சொத்து மற்றும் முதலீடுகளை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் … Read more

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில், துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் நியூடவுன், கனெக்டிகட், புளோரிடா என பல இடங்களில் … Read more

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை

லாகூர்: கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் தீவிரவாதி சாஜித் மிர்ருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. … Read more

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா- வங்கதேசம் இடையே இயக்கப்படும் மிதாலி எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தம்.!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா- வங்கதேசம் இடையே இயக்கப்படும் மிதாலி எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் 6ந்தேதி முதல் 9 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. நியூஜல்பைகுரி- டாக்கா இடையே இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. வங்கதேச ரயில்வே விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியன் ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. ஈத் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் வழக்கம் போல இந்த ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமெரிக்க அதிபர் கையெழுத்து| Dinamalar

வாஷிங்டன் : துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. சமீப காலமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில், துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.அதேபோல் நியூடவுன், கனெக்டிகட், புளோரிடா என பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் … Read more