'ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் வெளியேறவில்லை' – ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி பற்றி அமெரிக்கா புதிய தகவல்

வாஷிங்டன்: தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் அவ்வாறாக செய்யவில்லை என்று அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு ஒன்று சொல்லியுள்ளது. தி ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஃபார் ஆப்கானிஸ்தான் ரீகன்ஸ்ட்ரக்ஷன் The Special Inspector General for Afghanistan Reconstruction (SIGAR) தனது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 2021 அன்று அஷ்ரப் … Read more

உயிர்காக்கும் மருந்து இலங்கைக்கு உதவி| Dinamalar

கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி பால் பவுடர் மருந்துகள் மீனவர்களுக்கு டீசல் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிலையில் அம்பந்தோட்டா யாழ்ப்பானம் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேற்று … Read more

104வது நாளாக தொடரும் போர்; அமெரிக்கா மீது ரஷ்யா விதித்துள்ள முக்கிய தடை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 104 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனுடன் உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்யா இப்போது அமெரிக்கா மீது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் 61 அமெரிக்க  61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்  மீது பொருளாதார … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். 2020 கொரோனா முதல் அலையில் விதிமுறைகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டது உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய போரிஸ் ஜான்சன் சொந்த கட்சி உறுப்பினர்களிடயே அதிருப்தியை சம்பாதித்தார். அவருக்கு எதிராக சொந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே புகார் அளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 211க்கு 148 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் … Read more

தற்கொலைப்படையாக மாறுவேன் : பாகிஸ்தான் எம்.பி., மிரட்டல்| Dinamalar

இஸ்லாமாபாத் : ‘முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஏதாவது நேர்ந்தால், தற்கொலைப் படையாக மாறுவேன்’ என, பாகிஸ்தான் அரசுக்கு, அவருடைய கட்சி எம்.பி., ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.இம்ரான் கானை கொல்வதற்கு சதி நடந்ததாகவும் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சியினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், … Read more

அமைச்சரை அலுவலகத்தில் வைத்தே சுட்டு கொன்ற நீண்ட நாள் நண்பர்

டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்டகால நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக Orlando Jorge Mera,என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.  நேற்று காலை தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரை சந்திக்க தொழிலதிபரும் நீண்டகால நண்பருமான “Miguel Cruz சென்றுள்ளார். பின்னர் திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை  எடுத்து ஒர்லண்டோவை சரமாரியாக 7 முறை சுட்டதில் படுகாயம் … Read more

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. குவாங்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டனர்.  Source link

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; குழந்தைகள் உட்பட 50 பேர் பலி| Dinamalar

அபுஜா : தேவாலயத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓவோ நகரிலிருக்கும் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வழிபாட்டில் இருந்த கிறிஸ்தவர்கள் சிதறி ஓடினர். ஆலயத்துக்கு வெளியே ஓடி வந்தவர்களை அங்கு காத்திருந்த மற்றொரு கும்பல் … Read more

நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு எதிரொலி – பாகிஸ்தான் கண்டனத்துக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், அவர்களது பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பெரிய அளவில் மத மோதல் வெடித்தது. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டம் தெரிவித்திருந்தார். அவர் கூறும்போது, “இந்தியாவை தற்போது ஆட்சி … Read more

கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டிக் கிடந்த வலை, பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடல் மாசு தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு  மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த 23 புள்ளி 5 டன் வலை, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.  Source link