6.5 கி.மீ தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள்.. அகற்றும் பணியில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்..!

டொனட்ஸ்க் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கன்னி வெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றும் காட்சிகளை ரஷ்ய அவசரகால அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற டொனட்ஸ்க் பகுதியில், சுமார் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்ட கன்னி வெடிகளை அகற்றும் பணியில், ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். இதில், ரிமோட் மூலம் இயங்கக்கூடிய கன்னி வெடி அகற்றும் வாகனம் மூலம் 10 டாங்கி எதிர்ப்பு கன்னி வெடிகள் மற்றும் சாதாரண கன்னி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. Source link

உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உதவ வேண்டும்.. இலங்கை வேளாண்துறை அமைச்சர் கோரிக்கை..!

உணவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீராவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையின் உணவு  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும் என்று அமைச்சர் மகிந்தா அமரவீரா கோரிக்கை விடுத்தார். Source … Read more

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

அமெரிக்கா: சமீப காலமாக அமெரிக்காவில் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் துப்பாக்கி சூடு தொடர்பான 3க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் இந்த திசையில் முதன் முதலாக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க்கில் கைத்துப்பாக்கிக்கு புதிய சட்டம் அமெரிக்காவில் அதிகரித்து … Read more

பெண் பறவையை கவர நளினத்துடன் நடனமாடிய ஆண் பறவை.. மயங்காத பெண் பறவையால் ஏமாற்றம்..!

அமெரிக்காவின் விக்டோரியா மாகாண வனப்பகுதியில், ரைஃபிள் இன ஆண்பறவை ஒன்று பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து ஆடிய நடனம் பயனற்று போனது. இணை சேருவதற்காக தலையை ஆட்டியும், சிறகுகளை குவித்தும் அந்த ஆண் பறவை ஆடிய நடனம் ஏனோ அந்த பெண் பறவையை கவரவில்லை. நடனத்தை மட்டும் கண்டு களித்து விட்டு அந்த பெண் பறவை பறந்து போனதால் ஆண் பறவை ஏமாற்றம் அடைந்தது. இந்த காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. Source link

வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை.. வருகிறது புதிய மாடல்!

பொதுவாகவே அரசுத் துறையாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி ஒரு வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் வேலை இருக்கும். பெரும்பாலான இடங்களில் 6 நாட்கள் வேலை நடைமுறைதான் அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை. பணி நேரமும் அதிகமாக இருப்பதால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேநேரம் வேலையும் பாதிக்கப்படக் கூடாது. இந்நிலையில், ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது சோதனை ஓட்டமாக இங்கிலாந்தில் 70 … Read more

திபெத்தில் தொடர்ந்து உருகி வரும் பனிப்பாறைகள்.. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

திபெத்தில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகி வருவதால் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. திபெத்திலிருந்து உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகளை நம்பி ஆசிய கண்டத்தில் சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பருவ நிலை மாற்றம், காடுகளை அழித்தல், கனிம வளங்களை அதிக அளவில் வெட்டி எடுத்தல் போன்ற பிரச்சினைகளால் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதாக திபெத் மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  Source link

100% ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – சோதனை அடிப்படையில் இங்கிலாந்தில் அமல்

லண்டன், இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் ஊதிய இழப்பு இல்லாமல் ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்குகொள்கின்றன. தொழிலாளர்கள் தங்கள் உட்சபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற புரிதலின் பெயரில் அவர்களுக்கு 100 சதவீத ஊதியத்தை கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. இந்த … Read more

பெண்ணை தண்டாவளத்தில் தள்ளி விட்ட நபர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்செஸ்டர் & ஜாக்சன் ஏவ் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நடந்து வந்த 52 வயதுள்ள பெண்ணை அவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விரைந்து சென்று அப்பெண்ணைக் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் படிக்க | அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு … Read more

முடிவுக்கு வந்தது பொது முடக்கம்.. கிடு கிடுவென எகிறிய கச்சா எண்ணெய் விலை.!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.  ஷாங்காயில் இரண்டு மாதத்திற்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுவதுடன், துறைமுகங்களும் செயல்பட தொடங்கியுள்ளதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சவுதி அரேபியாவும், ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் உயர்த்தியுள்ளது.    Source link

அமெரிக்கா : தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்..!!

புளோரிடா, அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மாதம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் … Read more