ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியாவின் தென் மேற்கு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாிந்து நாசமானது. இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினா் அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாாிகள் தொிவித்தனா். 2 ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், … Read more

கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை வைத்து அடித்து விரட்டிய நபர்..!

ஆஸ்திரேலியாவில் தன்னை கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை (frying pan) வைத்து அடித்து விரட்டிய நபரின் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். கேளிக்கை விடுதி உரிமையாளரான கைஹான்சன் என்பவர் அடிலெய்டு ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்த நேரத்தில், ஆற்றில் இருந்த முதலை அவரை தாக்க வந்தது. அப்போது, தான் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வைத்து முதலையை அடித்து விரட்டினார்.  Source link

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி

லண்டன், இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடிப் போய் காணப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் … Read more

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு புகார்கள்… குற்றங்களை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் அங்கு நான்கு அல்லது ஐந்து பலாத்கார புகார்கள் எழுவதாக கூறப்படுகிறது. பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுக்கப்படும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். Source … Read more

விருச்சிகாசன நிலையில் 29 நிமிடங்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..!!

துபாய், துபாயில் உள்ள இந்திய யோகா ஆசிரியர் ஒருவர் யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 21 வயதாகும் யாஷ் மன்சுக்பாய் மொராடியா என்பவர் தொடர்ந்து 29 நிமிடங்களாக விருச்சிகாசனா நிலையில் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனை வீடியோ கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 29 நிமிடங்கள் மற்றும் நான்கு வினாடிகளாக அவரின் சாதனை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதியான நேற்று சர்வதேச யோகா தினம் … Read more

கடலில் மூழ்கிய ஜம்போ கிங்டம் ஹோட்டல் கப்பல்.. ஹாங்காங் மக்கள் வருத்தம்..!

ஹாங்காங்கின் பெருமைக்குரிய அடையாளமாக திகழ்ந்த ஜம்போ கிங்டம் ஹோட்டல் கப்பல், கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரண்மைனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த புகழ்பெற்ற கப்பல் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் பராமரிப்பு செலவினால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கப்பல் அண்மையில் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்டது. இழுவை படகுகள் மூலம் இழுத்துச்செல்லப்பட்ட அந்த கப்பல் பாரசெல் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், பல உலக பிரபலங்களின் … Read more

3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி – ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை !

மாஸ்கோ, மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3-ம் உலகப் போரில் ரஷியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று படை வீரர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான ஈவ்ஜெனி, மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரிட்டன் … Read more

உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டவர்கள் இவர்கள்தானாம்.. லண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்.!

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சனும், நடிகை ஆம்பர் ஹெர்டும் உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டுள்ளதாக லண்டனை சேர்ந்த முக அறுவை சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. முக அமைப்பு குறித்து இந்நிறுவனம் கிரேக்க பாரம்பரிய PHI முறையில் நடத்திய ஆய்வில், ராபர்ட் பாட்டின்சனை தொடர்ந்து, ஹென்றி கேவிலும், ஆம்பர் ஹெர்டை தொடர்ந்து, கிம் கர்தாஷியனும் அழகான முக அமைப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. Source link

சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கம் வென்று சாதனை..!

ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், 1,500 மீட்டர் freestyle பிரிவில் அதிவேகமாக நீந்திய அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார். போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேட்டி, சகபோட்டியாளர்களை காட்டிலும் வேகமாக நீந்தி, எல்லை கோட்டை 15 நிமிடம் 30 புள்ளி 15 விநாடிகளில் கடந்தார். எல்லைக்கோட்டை தொட்ட அவர், சக போட்டியளர்களுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது.   Source link

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,000 ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 1000 பேர் வரை பலியானதாகவும், 1,500 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் … Read more