Bilateral Microstomia: அரிய நோயால் நிரந்திர புன்னனகையுடன் பிறந்த குழந்தை

உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா…  வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சமீபகாலமாக அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் … Read more

ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேச்சு.!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேச்சு நடத்த உள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாடு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஜூன் 24ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா … Read more

Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO

உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் நோய் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என கனடா, அமெரிக்கா உள்ளிட்ட … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனாவின் ஷாங்காய் நகர்.. ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்த முடிவு..!

சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறவும் வணிக வளாகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல, பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. 30க்கும் மேற்பட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டதால், மக்கள் பூங்காக்களில் கூடினர். Source … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

Live Updates 28 May 2022 12:31 AM GMT உக்ரைனை ராணுவ ரீதியாக கைவிட்ட இங்கிலாந்து…! ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 28 May 2022 12:27 AM GMT உக்ரைன் … Read more

கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பிலிருந்து கோபமாக வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களின் கேள்விகளால் ஆத்திரம் அடைந்து பேட்டியின் நடுவே வெளியேறினார். பெஷாவரில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், அண்மையில் அவர் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். செய்தியாளர் ஒருவர் வன்முறை வீடியோவை திரையிட்டு அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டதும், பகையுணர்வைத் தூண்டிவிட அவர் முயற்சிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.  Source link

பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்- சுட்டுக்கொன்ற போலீசார்

ஒட்டாவா: கடந்த மே 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் … Read more

சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 'கிடுகிடு' உயர்வு லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிப்பு

இ்ஸ்லாமாபாத், பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை … Read more

உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய்.. சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பரவல் நோய் பிரிவிற்கான இயக்குநர் சில்வி பிரையண்ட், இந்த குரங்கு அம்மை பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என தெரிவித்தார். மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த குரங்கு அம்மை நோய், லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது.  Source link

இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்

கொழும்பு : இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் … Read more