பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.!

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து 200 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதே போல், நியூ கலிடோனியா லாயல்டி தீவுகளின் தென்கிழக்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு … Read more

டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் வைத்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்காக அனுசரிக்கப்பட்ட நினைவேந்தலில் மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர். அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிலுவைகள் அருகே மலர்களை வைத்தும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அமெரிக்க நடிகையும், பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியுமான மேகன் மார்க்கல் இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினார். Source link

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு அனுமதி

இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களும் எரிபொருள் இறக்குமதி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிலோன் பெட்ரோலிய நிறுவனத்தின் சுமை குறையும் என இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Source link

வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி-அதிபர் புதின்

சில வெளிநாட்டு நிறுவனங்கள், ரஷ்யாவை விட்டு வெளியேறியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பதைக் கண்டித்து மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தன. அது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், இதன் மூலம் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையக்கூடும் என்றும் கூறியுள்ளார்.   Source link

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஜப்பான் விடுத்த மகிழ்ச்சி செய்தி

டோக்கியோ: ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலகளவில் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜப்பானும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை … Read more

பொருளாதார மந்தநிலை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கும்-எலான் மஸ்க்

உலக பொருளாதார மந்தநிலை, அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகளவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்த டிவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு உலக பொருளாதார மந்தநிலை தொடரும் எனவும், இயல்பான பணப்புழக்கத்திற்கு எதிரான நிறுவனங்கள் முடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூடு-மனைவி இறந்த 2வது நாளே கணவனும் மாரடைப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில், டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஆசிரியை ஒருவரின் கணவர், மனைவி உயிரிழந்த இரண்டாவது நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். செவ்வாய்கிழமை டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் புகுந்த 18 வயது இளைஞர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். அப்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியை இர்மா கார்சியா ((Irma Garcia)) அங்கிருந்து தப்பியோடாமல் குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சியில் தனது உயிரை தியாகம் செய்தார். அவர் உயிரிழந்த இரண்டாவது நாளே அவரது கணவர் ஜோ மாரடைப்பால் … Read more

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா| Dinamalar

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவிவகித்தார். இதையடுத்து வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அவர் இலங்கையின் ராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். … Read more

போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

பிரேசிலில், கருப்பினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு போலீசாரால் கொல்லப்பட்ட நிகழ்வு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் அம்பாஉபா நகரில், ஜீசஸ் சாண்டோஸ் (Genivaldo de Jesus Santos) என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, பெடரல் போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சாண்டோஸ் மீது தாக்குதல் நடத்திய போலீசார் பின்னர், அவரை காரின் பின்பக்கத்தில் அடைத்து வைத்து கண்ணீர் புகையை செலுத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விசாரணைக்கு … Read more

19க்கும் 76க்கும் லவ் : விரைவில் டும் டும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட காதலை அடுத்து, திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. முன்பெல்லாம் திருமணத்திற்கு பெண் தேடுபவர்கள், பெண்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து திருமணம் முடித்தனர். ஆனால் இப்போதெல்லாம் பெண் கொடுத்தால் போதும் வேறெதுவும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளது. பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஆண்களின் நிலையே இதற்கு காரணம். அப்படி இருக்கும் சூழலில், … Read more