காயமடைந்த வீரர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்..!

உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை அதிபர் புதின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை சந்தித்து, கைகளை குலுக்கி அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.  Source link

உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

லண்டன்: உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது.  குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம். காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக … Read more

மங்கிபாக்ஸ் வைரஸ் 19 நாடுகளுக்கு பரவல்| Dinamalar

வாஷிங்டன் : கொரோனாவை தொடர்ந்து ‘மங்கிபாக்ஸ்’ என்ற அம்மை நோய், 19 நாடுகளில், 131 பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து புளும்பெர்க் நிறுவனத்தின் மூத்த மருந்தியல் ஆய்வாளர் சாம் பசேலி கூறியதாவது: மங்கிபாக்ஸ் நோய், தட்டம்மை, பெரியம்மை போன்றது தான். இதில் உயிரிழப்பு மிகக் குறைவானது. இருபது ஆண்டுகளுக்கு முன் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் மங்கிபாக்ஸ் வைரஸ் காணப்பட்டது. கடந்த, 2003ல் அமெரிக்காவில், 71 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. … Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டு வெடிப்புகள்… 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் காயம் அடைந்தனர். ஷியா பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதே போல்  Mazar-i-Sharif நகரில் 3 மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.தாஹேஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Source … Read more

டெக்சாஸ் தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – உலகை உலுக்கிய சம்பவத்தின் முழு விவரம்

டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப்என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு … Read more

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் ரயில் இருப்பு பாதை கடும் சேதம்.!

உக்ரைனின் டொனெஸ்க் பகுதியை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ரயில் இருப்பு பாதை உருக்குலைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. போக்ரோவ்ஸ்கில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரயில் இருப்பு பாதைகள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன. Source link

இலங்கையில் வாகனங்களின் விலை கடும் உயர்வு

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு,  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை விலையும் தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதன்படி இலங்கையில் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர், மோட்டார்  சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்படி முன்னணி … Read more

இலங்கையில் நிதியமைச்சராகவும் ரணில் பொறுப்பேற்றதன் பின்னணி

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இலங்கையில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து மகிந்த ராஜக்பச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது வீட்டை மக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால், அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க … Read more

கோமாளிகள் தினத்தை முன்னிட்டு வீதியில் திரண்ட கோமாளிகள் மக்கள் உற்சாக வரவேற்பு

பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் நீண்ட காலணிகள், வண்ணம் பூசிய முகங்கள், விக்குகள் அணிந்து பேரணி நடத்தினர். குழந்தைகளுடன் பேரணியைக் காணத் திரண்ட உள்ளூர் மக்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பி கோமாளிகளை வரவேற்றனர். மக்களை சிரிக்க வைப்பதுதான் தங்கள் கலை என்று கூறும் இந்த கோமாளிகள் பணிச்சுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அழுத்தங்களை நீக்குவதாகக் கூறுகின்றனர். ஏழைகளின் கோமாளி என்று அழைக்கப்பட்ட பிரபல கலைஞர் Toni Perejil நினைவாக1987 முதல் ஆண்டுதோறும் கோமாளிகள் … Read more

இஸ்ரேலில் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழப்பு.!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். மேற்குகரையின் நப்லுஸ் நகரில் உள்ள யூத மத வழிப்பாட்டு தலத்திற்கு பாதுகாப்பு படையினரோடு சென்ற இஸ்ரேலியர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர் Source link