ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை- உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கிவ், மே. 25- உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது. இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான … Read more

அமெரிக்காவில் மாணவர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்களை குறிவைத்தே நடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கொலராடோவின் … Read more

‘‘நானே கவனித்துக் கொள்கிறேன்’’ – இலங்கை நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் முன்வராத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என … Read more

பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுள் நிறைவு.. 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியீடு!

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 96 வயதான எலிசபெத் பிரிட்டன் ராணியாக கடந்த 1952-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் இவரது 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை ராயல் அரண்மனை நான்கு நாட்கள் விழாவாக ஜூன் மாதம் கொண்டாட உள்ளது. அவரது பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 8.7 அங்குலம் விட்டம் … Read more

அமெரிக்க பள்ளிகளில் நடத்தப்பட்ட 8 பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

டெக்சாஸ்: அமெரிக்காவில் பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிக பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நியூயார்க்கின் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். இந்தத் துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த … Read more

நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமங்கே கூடுதலாக ஏற்றுக் கொண்டுள்ளார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். வரலாறு காணாத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பட்ஜெட்டை பிரதமர் … Read more

திடீரென தீப்பிடித்த “டெஸ்லா” மின்சார கார்.. ஜன்னலை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பிய ஓட்டுநர்

கனடா நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் வெளியேறினார். ஜமீல் ஜுத்தா (Jamil Jutha) என்ற அந்த நபர், 8 மாதங்களுக்கு முன் வாங்கிய டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் மின்சார காரை ஓட்டிச் சென்ற போது திடீரென எச்சரிக்கை ஒலி கேட்டுள்ளது. காரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கதவுகள் மூடிக்கொண்டதுடன், ஏசி துவாரங்கள் வழியாக புகை வரத் தொடங்கி உள்ளது. இதனால் வேறு வழியின்றி ஜன்னல் கண்ணாடியை உடைத்து … Read more

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை

கொழும்பு: இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது. இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி … Read more

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?…ஜோ பைடன் வேதனை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இந்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எப்போது முடிவு கட்டப்போகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். … Read more

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

வடகொரியா, ஜப்பான் கடலை நோக்கி 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. சுனான் பகுதியில் இருந்து, அடுத்தடுத்து 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறியுள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் இதனை சந்தேகிக்கிறது. தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை குறித்து ஆலோசனை மேற்கொண்டதோடு, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார். ஜோ … Read more