ஜப்பானில் இன்று துவங்குகிறது குவாட் மாநாடு;| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘குவாட்’ மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். முன்னதாக ஜப்பானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டோக்கியோவில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் இன்றைய முக்கிய நிகழ்வாக டோக்கியோவில் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: 'ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது' – உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர் பேச்சு

கீவ், உக்ரைன் போரில் மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள அஜோவ் உருக்காலையை பாதுகாத்த உக்ரைன் படையினர் 2,500 பேர் ரஷிய படைகளிடம் சரண் அடைந்து விட்டனர். அவர்களில் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு, எஞ்சியவர்கள் ரஷிய கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2,500 பேர் கதி என்ன ஆகப்போகிறது என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர்களுக்கு கைதிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், உக்ரைனுக்கு திருப்பி … Read more

13 நாடுகளின் புதிய கூட்டமைப்பு தொடக்கம் – பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை (ஐபிஇஎப்) உருவாக்கி உள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று முன்தினம் டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் … Read more

குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு.. அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை..!

டோக்கியோவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் , சீனாவின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் தலைநகரம் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஜப்பானும் இந்தியாவும் இயல்பான நட்பு நாடுகள் என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்தோ பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்த அமெரிக்கா, ஜப்பான், … Read more

சீண்டிய பராமரிப்பாளரின் விரல்களை துண்டித்த சிங்கம்| Dinamalar

கிங்க்ஸ்டன்: வனவிலங்கு பூங்காவில் பராமரிப்பாளர் கையை சிங்கம் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை அதன் பராமரிப்பாளர் சிறு துளை வழியாக சிங்கத்தை தொட்டு சீண்டினார். சிறிய துளை என்பதால் சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார். ஆனால், கடும் கோபத்தில் இருந்த சிங்கம் ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் கைவிரல்கள் கவ்வி கடித்தது. அவர் கடுமையாக … Read more

'வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது' – தென்கொரியாவின் புதிய அதிபர் தடாலடி

சியோல், 1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான பகைமை நிலவி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவின் அதிபராக இருந்து வந்த மூன் ஜே இன் வடகொரியாவை சமாதானம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அவற்றை பொருட்படுத்தாததால் மூன் ஜே இன்னுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தென்கொரியாவில் அண்மையில் நடந்து முடிந்து … Read more

ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஜவுளி முதல் ஆட்டோ மொபைல் துறை வரை தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை நிலவுவதாகவும், முதலீடு செய்ய வருமாறும் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று டோக்கியோவில் அந்நாட்டின் பெரிய தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஜப்பானிலுள்ள என்இசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ என்டோ, சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் மசாயோஷி … Read more

இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது

கொழும்பு: இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.  இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

ஆஸ்திரேலிய பிரதமராகஆல்பேன்ஸ் பதவி ஏற்பு| Dinamalar

கேன்பெரா-ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, ‘கன்சர்வேட்டிவ்’ கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலகினார்.தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி ஆல்பேன்ஸ், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானில் இன்று நடக்கவுள்ள ‘குவாட்’ பாதுகாப்பு மாநாட்டில், புதிய பிரதமர் ஆல்பேன்ஸ் பங்கேற்க வேண்டி இருப்பதால், அவரும், புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்கும், நேற்று பதவி ஏற்றனர். … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி

லண்டன், உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 4-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷியா இந்த போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷியா திணறி வருகிறது. மேலும் இந்த போரில் உக்ரைனை காட்டிலும் ரஷியா பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்கும் ஆற்று … Read more