1,070 அடி உயர கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏறிய இளைஞர் கைது

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏறிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவை இயற்றி வருவதாக வெளியான தகவலை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் (Maison DesChamps) என்ற 22 வயது கல்லூரி மாணவர், கருக்கலைப்புக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக சான் பிரான்சிஸ்கோ நகரின் உயரமான கட்டிடமாக கருதப்படும் … Read more

கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான பெண்

கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக உயரமான பெண்மணி என்று பெயர் பெற்ற துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இதன்மூலம், துருக்கி பெண் மொத்தம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிப்ரவரி 2022-ம் ஆண்டில், வாழும் பெண்ணின் நீளமான விரல் 11.2 செ.மீ (4.40 அங்குலம்), உயிருள்ள ஒருவரின்  (பெண்) மீது  மிகப்பெரிய கைகள் பிரிவில் அவரது வலது கை 24.93 செ.மீ (9.81 அங்குலம்) … Read more

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலி.. பெய்ஜிங்கில் மெட்ரோ நிலையங்கள், பேருந்து வழித்தடங்கள் மூடல்

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்த ஷாங்காய் நகரில் ஒரு மாதத்திற்கு மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஷாங்காய் நகரைப் போன்ற முழு ஊரடங்கை தவிர்க்கும் விதமாக, பொதுப் போக்குவரத்து பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

‘நான் ஒன்றும் இயந்திர மனிதன் இல்லை’ – கலங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழைத்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார். பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு … Read more

கோடை காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத் தீ.. பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து வீரர்களுக்கு பயிற்சி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வருடாந்திர பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் கலந்து கொண்டன. கலிபோர்னியாவில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 10 லட்சம் ஏக்கர் காடுகளும், 2021ம் ஆண்டில் சுமார் 9 லட்சம் ஏக்கர் காடுகளும் தீக்கிரையாகின. இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கையாக காட்டுத் தீயை கையாள்வது குறித்து வனவியல் மற்றும் தீயணைப்புத் துறை சார்பில், பெயின்ஸ் … Read more

உக்ரைனின் லிவிவ் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால், துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து பேசிய லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி, இந்த தாக்குதலில் 3 துணை மின் நிலையங்கள், கிடங்குகள் உட்பட 60 கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். துணை மின்நிலையங்கள் சேதமடைந்ததால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காஸ்பியன் கடலில் இருந்து மொத்தமாக ஆறு ஏவுகணைகள் … Read more

லண்டனில் காரைத் திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.!

லண்டனில், காரைத் திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜோஹல் ரத்தோர் என்ற இளைஞர், கடந்த ஆகஸ்ட் மாதம் ரேஞ்ச் ரோவர் காரைத் திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையின் தவறான வழியில் சென்று வேன்மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கைது செய்தனர்.  ஏறத்தாழ 6 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் சேதவிளைவுகளை ஏற்படுத்தியதாக ஜோஹல் ரத்தோருக்கு … Read more

அமெரிக்க பணி அனுமதி ஆணை மேலும் 1.5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு காலவதியான பணி அனுமதி ஆணையை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க கிரீன் கார்ட் வேண்டி காத்திருப்போருக்கும், ஹெச்.1பி வீசா வைத்திருப்பவர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காலாவதியான பணி அனுமதி ஆணை தானியங்கியாக 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் நிலையில், தற்போது 540 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக விதி குடிமக்கள் அல்லாதவர்களுக்கும், தானியங்கி நீட்டிப்புக்கு தகுதியுடையவர்களுக்கும் … Read more

மரியுபோலில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்.!

உக்ரைன் நாட்டின் மரியுபோலில் உக்ரேனிய வீரர்களுடன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் உதவியுடன் உருக்காலையில் இருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக, உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்ஜியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இன்னும் பலர் அங்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்ய படைகள் மீண்டும் அங்கு தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. Source link

Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.  நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டதன் மூலம் அரசியலமைப்பு கடமையில் அவர்கள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எனக் … Read more