தமிழகத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்| Dinamalar

ரோம்: தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்தை சேர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், குமரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஷப்புகள், பங்கு தந்தைகள், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக … Read more

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 47 அடி நீளமுள்ள விந்து திமிங்கலத்தில் உடல் ஒதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இறந்த விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது நிபுணர்கள் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால், திமிங்கலத்தால் சரியாக சாப்பிட முடியாமல போயிருக்கலாம் எனவும், அதனால், இறப்பு நேரிட்டுள்ளதாகவும் … Read more

கொரோனாவுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் – நிபுணர்கள்

வடகொரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், காய்ச்சல் பாதிப்புக்கு மேலும் 15 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  காய்ச்சலால் இதுவரை 42 பேர்  பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில், 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதாக வடகொரிய அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலே பலருக்கும் காய்ச்சல் பரவியதாக கூறியுள்ள வடகொரியா, சரியாக எத்தனை பேர் … Read more

ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சி – புடனோவ்

ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் புடனோவ்  தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் புடனோவ் ,மூன்றே மாதங்களில் உக்ரைன் ரஷ்யா போரில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்றார். போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால் புடின் பதவி இழக்க நேரிடும் எனத் தெரிவித்த அவர், புடினின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான பணிகளை ரஷ்ய ராணுவ அதிகாரிகள் சிலர் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். … Read more

தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு| Dinamalar

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மின்டனில் லக்சயா, ஸ்ரீகாந்த், பிரனாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. பைனலில் 3-0 என, இந்தோனேஷியாவை வீழ்த்தியது. தாய்லாந்தில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பைனலில் இந்திய அணி, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதுவரை 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். … Read more

பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை

வாஷிங்டன்: பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது.  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது.  இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து … Read more

அவசரமாக பாலத்தில் தரையிறங்கிய விமானம் காருடன் மோதி கோர விபத்து

அமெரிக்கா மியாமி நகரில் என்ஜின் கோளாறால் பாலத்தில் அவசரமாக தரையிறங்கிய இலகு ரக விமானமும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்காயம் அடைந்தனர். 3 பயணிகளுடன் பறந்த இலகு ரக விமானத்தின் என்ஜின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரையிறக்கப்பட்டது. எதிர் திசையில் வந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானத்தில் தீ பற்றியது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் உடல் … Read more

பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர்: பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பாட்டா டால் பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்த சல்ஜீத் சிங் (42), ரஞ்ஜீத் சிங் (38) என்பது தெரியவந்தது.  கொலை நடந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். … Read more