UAE புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆட்சியாளரின் தலைமையில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “அபுதாபியின் ஆட்சியாளர் எச்.எச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது … Read more

என் உயிருக்கு ஆபத்து, சதித்திட்டம் தீட்டுவது யார் என்று தெரியும் – இம்ரான் கான்

தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த சதியின் பின்னால் இருப்பது யார் என்று தமக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், தம்மைக் கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தானில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறினார். தாம் ஒரு வீடியோவில் இதில் தொடர்புடையவர்களின் பெயர்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறிய இம்ரான் கான் தாம் கொல்லப்பட்டால் இந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். … Read more

இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்- அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே ஆதரவு

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது.  இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். … Read more

அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த துபாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.  இந்நிலையில், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர், முதலில் 4 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் சூப்பர் … Read more

ஒரு கையில் குழந்தை, மறு கையில் டிராலி… இப்படியும் கதவை மூடலாமா?

விமானத்தில் பெண் ஒருவர் ஒரு கையில் குழந்தை, மறு கையில் டிராலியை வைத்துக்கொண்டு இருக்கைகளின் மேலே உயரமான இடத்தில் இருந்த உடைமைகள் வைக்கும் பகுதியின் கதவை காலால் மூடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், அந்தப்பெண் உடனடியாக காலை தூக்கி உடைமைகள் வைக்கப்படும் பகுதியின் கதவை மூடிவிட்டு சென்ற காட்சிகளை ஃபிகென் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஸ்டார்லிங் செயற்கைகோள்களின் 2-வது தொகுதியை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் – விரைவில் இந்தியாவில் செயல்படுத்த திட்டம்?

தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட்டில் ஸ்டார்லிங் செயற்கைகோள்களின் 2வது தொகுதியை விண்ணில் செலுத்தியது. புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 53 ஸ்டார்லிங் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் பூஸ்டர் இன்று அட்லாண்டிக் பெங்கடல் பகுதியில் குறிக்கப்பட்ட இடத்தில் வந்திறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுசுழற்சி முறையில் பால்கன் 9 ராக்கெட்டின் பூஸ்டரை 111-வது முறையாக ஸ்பேஸ் எக்ஸ் … Read more

மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா … Read more

‘‘பயனர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்; என் மீது ட்விட்டர் புகார்’’ – எலான் மஸ்க்

நியூயார்க்: வெளியாகாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் … Read more

லண்டன் தெருக்களில் இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி.. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் சுவிஸ் வீரர் சாம்பியன்..!

லண்டன் தெருக்களில் முதல் முறையாக நடத்தப்பட்ட இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்றனர். 470 மீட்டர் தூர குறுகலான தெருக்களில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் அனீஷ் ஷெட்டி பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.  Source link

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். குயின்ஸ்லாந்தில் சென்ற சைமண்ட்சின் கார் சாலையை விட்டு விலகி சில அடி தூரத்திற்கு உருண்டு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். Townsville நகர் அருகே சைமண்ட்சின் கார் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரில் சைமண்ட்ஸ் மட்டும் இருந்ததால் விபத்து எப்படி நேர்ந்தது என ஆஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறப்பிற்கு கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   Source link